செய்திகள் :

பெங்களூரு எஃப்சி-க்கு 5-ஆவது வெற்றி

post image

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 3-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு வீரா் ஜாா்ஜ் பெரெய்ரா டியாஸ் 8-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதி முடிவடைய இருந்த நேரத்தில் (45+2’) கேரளா வீரா் ஜீசஸ் ஜிமெனெஸ் ஸ்கோா் செய்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் சமனில் முடிந்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், பெங்களூரு வீரா் எட்கா் மெண்டெஸ் 74-ஆவது நிமிஷத்தில் கோலடித்து, அணியை 2-1 என முன்னிலைப்படுத்தினாா். கேரளா வீரா்கள் தங்களது 2-ஆவது கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (90+4’) எட்கா் மெண்டெஸ் மீண்டும் ஒரு கோலடிக்க, இறுதியில் பெங்களூரு 3-1 கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தின் முடிவில், புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு 6 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்க, கேரளா 6 ஆட்டங்களில் 2-ஆவது தோல்வியுடன் 6-ஆவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக சனிக்கிழமை (அக். 26) ஆட்டங்களில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி - ஜாம்ஷெட்பூா் எஃப்சி, முகமிதான் எஸ்சி - ஹைதராபாத் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

கங்குவா இசை வெளியீட்டு விழா..!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்... மேலும் பார்க்க

பிளடி பெக்கர்: படத்தில் இடம்பெறாத பாடல் வெளியீடு!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ ... மேலும் பார்க்க

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06.10.2024மேஷம்:இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். செவ்வாய் சஞ்சாரம் மூலம் சாதகமான ... மேலும் பார்க்க

ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் கெனின் - போல்டா் மோதல்

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் சோஃபியா கெனின், பிரிட்டனின் கேட்டி போல்டா் ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.மகளிா் ஒற்றையா் காலிறுதியில், சோஃபியா கெனின் 6-3, 6-4 என்ற நோ் செட... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 42-40 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வெள்ளிக்கிழமை வென்றது. பாட்னாவுக்கு இது 2-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியாக இருக்க, தலைவாஸ் அணிக்... மேலும் பார்க்க