செய்திகள் :

`பெண்கள் வலிமையற்றவர்கள் அல்ல...' - இரு விரல்களில் மினி பஸ்ஸை இழுத்து சாதனை படைத்த யோகா ஆசிரியர்

post image

திருவண்ணாமலை கிரிவல பாதையில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு, ஐந்து டன் எடையுள்ள பேருந்தை இரு விரல்களால் 250 மீட்டர் இழுத்துச் சென்று, யோகா ஆசிரியர் ஒருவர் சாதனை படைத்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்திய பெண்கள் முன்னேற்றம் மற்றும் சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பை வலியுறுத்தி யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான கல்பனா, ஐந்து டன் எடை கொண்ட மினி பஸ்சை 250 மீட்டர் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார். அங்கிருந்த மக்கள் இவரை கைத்தட்டலுடன் உற்சாகப்படுத்தி ஊக்குவித்தனர்.

இந்நிகழ்ச்சி கிரிவல பாதையில் ராஜராஜேஸ்வரி கோயில் அருகில் தொடங்கி திருநேர் அண்ணாமலை திருக்கோயிலில் நிறைவடைந்தது. இதனை தனது இரு வலதுகை விரல்களை மட்டுமே பயன்படுத்தி மினி பஸ்சை இழுத்துச் சென்றார் என்பது பாராட்டிற்குரியது. இவர் எட்டு வருடங்களாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஓய்வு நேரங்களில் இலவசமாகவும் பயிற்சி அளிக்கிறார்.

இச்சாதனை குறித்து யோகா மற்றும் சிலம்பம் பயிற்சியாளரான கல்பனாவிடம் உரையாடுகையில், ``நாம் யோகா செய்வதன் மூலம் நமது மனதை ஒருநிலைப்படுத்தலாம். ஆகையால் நமது உடலில் சக்தி மேம்படும். மனிதனின் மனதையும் உடலையும் உற்சாகத்துடனும் வலிமையுடனும் வைத்திருக்க யோகா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெண்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடனும் தைரியமாகவும் இருக்க வேண்டும். வலிமையோடு வாழ்க்கையில் போராடினால்தான் வரலாறு படைக்க முடியும். பெண்கள் என்பவர்கள் யாரும் யோசிக்காத அளவிற்கு வலிமை பெற்றவர்கள் என்பதற்கு சான்றாகவே இச்சாதனையை படைத்தேன்" எனக் கூறினார்.

பாலியல் வன்கொடுமையை தடுக்கும் விதமாக 2555 ஆணிகள் மீது 51 யோகாசனங்கள் செய்து யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பெற்றுள்ளார். உலக மகளிர் தினத்தன்று பெண்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தலைமுடியால் 1,500 கிலோ எடை கொண்ட காரை 400 மீட்டர் தூரம் வரை இழுத்துச் சென்றார். உலகப் பொதுமறையான திருக்குறளை 4:15 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் பின்னோக்கி எழுதியுள்ளார், இதனை கண்ணாடியில் பார்த்தால் முன்னோக்கி தெரியும். போதை பொருளை தடுக்கும் விதமாக இரு கண்களையும் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் 8 கிலோ மீட்டர் வரை கிரிவலம் சுற்றி வந்தார். மேலும் கின்னஸ் சாதனைக்காக தன்னை தயார்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Doctor Vikatan: திருமணமாகாத பெண்கள்... மார்பகப் புற்றுநோய் அபாயத்திலிருந்து மீள்வது எப்படி?

Doctor Vikatan:திருமணமாகாத பெண்களுக்கும், குழந்தை இல்லாத பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கான அபாயம் அதிகமா... அவர்கள் அந்த ரிஸ்க்கிலிருந்து எப்படித் தற்காத்துக்கொள்வது?பதில் சொல்கிறார் சென்னையைச் ச... மேலும் பார்க்க

Health: கர்ப்பிணிகள் ஏன் இடதுபுறம் ஒருக்களித்து படுக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் ஒருக்களித்துதான் படுக்க வேண்டுமா, ஏன் நேராக படுக்கக்கூடாது, எந்த வாரத்திலிருந்து குழந்தையின் அசைவை உணர முடியும், நஞ்சுக்கொடி சுற்றிக்கொண்டால் நார்மல் டெலிவரி ஆகாதா என்பதுபோன்ற எக்கச்ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓய்வா, உடற்பயிற்சியா... கர்ப்ப காலத்தில் எது சரி, எது தவறு?

Doctor Vikatan: கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்வது சரியானதா...வீட்டிலுள்ளபெரியவர்கள் ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள்... மருத்துவர்களோ உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்துகிறார்கள். இரண்டில் எது சரி?பதில் சொல்கிறார்... மேலும் பார்க்க