செய்திகள் :

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் பலி: சித்தராமையா

post image

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது,

மாநிலத்தில் இந்தாண்டு பருவமழை காலத்தில் ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை வழக்கமாகப் பதிவாகும் மழை அளவு 852 மி.மீ அளவை விட, இம்முறை 978 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. பருவமழை காலத்திலும் 15 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை மாநிலத்தில் சராசரியாக 181 மி.மீ., மழை பெய்துள்ளது. இது வழக்கமாக 114 மி.மீ ஆகும். மாநிலத்தில் 58 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

பருவமழையினால் பெய்த கனமழையால் மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர். மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

84 வீடுகள் முழுமையாகவும், 2,077 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது. முழுவதுமாக சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் இழப்பீடும், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக மொத்தம் 74,993 ஹெக்டேர் விவசாய பயிர் சேதமும், 30,941 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,05,937 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் மதிப்பிடப்பட்டுள்ளது. மழையால் மாநிலத்தில் 1.06 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் நாசமாகியுள்ளன.

மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 895 ஆகும். 62 ஆயிரம் மில்லியன் கன அடியாகவும், தற்போதைய நீர் இருப்பு 871.26 டிஎம்சியாகவும் உள்ளது.

பெங்களூருவில் இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் 275 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இது மூன்றாவது அதிக மழைப்பொழிவாகும் என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு... குஜராத்தில் ஒருவர் கைது!

இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்து முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்குத் தெரிவித்த குஜராத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாவட்டத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் சந்திப்பு

தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்தனர். பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா முதல்வர் நயப் சிங் சைனி, பிரதமர் மோடியை சந்தித்தார். இத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை மேற்கொண்டதையடுத்து இந்த பட்டியல் வெளியி... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளி... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!

வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் தேர்தல்: காங்கிரஸின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் ந... மேலும் பார்க்க