செய்திகள் :

மகாராஷ்டிரம் தேர்தல்: காங்கிரஸின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு!

post image

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. நவ. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்

கடந்த அக். 24ஆம் தேதி, 48 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலைக் காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிலையில் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூடித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து ஆலோசித்ததையடுத்து 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலுடன் மொத்தம் இதுவரை 71 வேட்பாளர்களைக் காங்கிரஸ் அறிவித்துள்ளது. எதிர்க்கட்சி தனது முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 25 எம்எல்ஏக்களை தக்கவைத்துள்ளது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! - ஈரான் தகவல்

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ், சிவசேனை (யுபிடி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய 3 கட்சிகளும் தலா 85 இடங்களில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள 23 இடங்களில் அந்தந்த கட்சி வேட்பாளர்கள் பட்டியலின் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளி... மேலும் பார்க்க

வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!

வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர... மேலும் பார்க்க

டானா புயல்: மேற்கு வங்கத்தில் 4 ஆக உயர்ந்த பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்குப் பலியானோர் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. கடந்த அக்.21ல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.23ல் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு "டானா" எனப் பெய... மேலும் பார்க்க

குஜராத்: மசூதி இடிப்பில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

குஜராத் மாநிலத்தில் மசூதிகள் உள்ளிட்ட வஃக்ப் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டடங்களை சட்டவிரோத கட்டுமானம் என்ற அடிப்படையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் புல்டோசா் இடிப்பு நடவடிக்கையில் தற்போதைய நில... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச... மேலும் பார்க்க

உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியல்: தமிழகம், தில்லி, மத்திய பிரதேச பள்ளிகள் இடம்பிடித்து அசத்தல்

2024-இல் உலகின் சிறந்த பள்ளிகள் தரவரிசையில் தமிழகம், தில்லி, மத்திய பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மூன்று பள்ளிகள் இடம்பிடித்துள்ளன. லண்டனை தளமாகக் கொண்ட ‘டி4’ கல்வி நிறுவனம் சிறந்த பள்ளிக்கான இந்த அங்கீ... மேலும் பார்க்க