செய்திகள் :

ஸ்பைடர் மேன் - 4: ரிலீஸ் தேதி..!

post image

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகும் ஸ்பைடர் மேன் 4 திரைப்படம் அவெஞ்சர்ஸ் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில் மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஹீரோ.

2002-இல்  "ஸ்பைடர்-மேன்', 2004-இல் "ஸ்பைடர்-மேன் -2', 2007-ல் ஸ்பைடர் மேன் 3 ஆகிய படங்கள் முதலில் வெளிவந்தன. பிறகு, 2012-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன்', 2014-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன் 2' மற்றும் 2017-இல் "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' , 2019-ல் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம், 2021இல் வே ஹோம் என இதுவரை 8 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 

கொலம்பியா ஃபிக்சர்ஸ் தயாரிப்பில் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் ஸ்பைடர் மேன் 4 உருவாகியுள்ளது. இந்தப் படம் ஜூலை 24ஆம் தேதி வெளியாகுமென ஆங்கில ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ மே 1, 2026இல் வெளியானதுக்குப் பிறகு 2 மாதம் கழித்து வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் ஜெண்டாயா நடிப்பாரா என்பது குறித்து எத்வும் சொல்லவில்லை. அடுத்தாண்டு மே மாதத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக நடிகர் டாம் ஹோலண்ட் கூறியுள்ளார்.

கடந்த 3 ஸ்பைடர் மேன் படங்களிலும் டாம் ஹோலண்ட் பீட்டர் பார்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படங்களை ஜான் வாட்ஸ் இயக்கியிருந்தார்.

2017 - ஸ்பைடர்-மேன்: ஹோம் கம்மிங்

2019 - ஸ்பைட-மேன்: ஃபார் அவெ ஃபிரம் ஹோம்

2021 - ஸ்பைட-மேன்: நோ வே ஹோம்.

கடைசியாக வெளியான ஸ்பைடர் மேன் உலகம் முழுவது 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 8ஆயிரம் கோடி) வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்குப் பிறகு இது வெளியானது.

இதே வகையில் 2026இல் அஞ்சர்ஸ் படத்துக்குப் பின் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஸ்பைடர் மேன் படத்தை டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ஷாங்ஷி & தி லெஜெண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த இயக்குநர் மார்வெல் படங்களில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அடுத்து வரவிருக்கும் வண்டர் வுமன் படத்திலும் இவரது பங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா விஜய் சேதுபதி படத்தின் முதல் பாடல்!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் அறிமுகமாகும் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் விஜய் சேதுபதி மகாராஜா திரைபடத்தில் பெரிய வெற்றியைப் பதிவு ... மேலும் பார்க்க

நடிகை அஞ்சு குரியனுக்கு நிச்சயதார்த்தம்!

நடிகை அஞ்சு குரியனுக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுள்ளது.மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அஞ்சு குரியன். ஓம் ஷாந்தி ஓஷானா, பிரேமம், ஞான் பிரகாஷன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர். தமிழில்,... மேலும் பார்க்க

தக் லைஃப் வெளியீட்டுத் தேதி - தகவல்!

தக் லைஃப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடி... மேலும் பார்க்க

காஷ்மீர் படப்பிடிப்பில் சந்தித்த பிரச்னைகள்..! விடியோ வெளியிட்ட அமரன் படக்குழு!

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கிறார். அமரன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் மேஜர் முந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாக... மேலும் பார்க்க

கங்குவா இசை வெளியீட்டு விழா..!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்... மேலும் பார்க்க

பிளடி பெக்கர்: படத்தில் இடம்பெறாத பாடல் வெளியீடு!

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பின் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.சமீபத்தில் நெல்சன் ‘ஃபிளமெண்ட் பிக்சர்ஸ்’ ... மேலும் பார்க்க