செய்திகள் :

உலகின் அதிக வயது பெண் மரணம்: 115 வயதில்..!

post image

உலகின் அதிக வயதான பெண்மணியும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலிசபெத் பிரான்சிஸ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் எலிசபெத் பிரான்சிஸ் (115). அமெரிக்காவில் வாழும் மிகவும் வயதான நபராகவும், உலகின் மூன்றாவது வயதான நபராகவும் இருந்தார்.

கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி எலிசபெத் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!

1909 ஜூலை 25ல் லூசியானாவில் பிறந்தார். முதலாம் உலகப் போரிலிருந்து டைட்டானிக் கப்பல் மூழ்கும் வரை அனைத்தையும் அவர் அனுபவித்தார். ஹூஸ்டனில் காபி கடையை நடத்தி வந்தார். அவர் வாகனம் ஓட்டுவதை விட நடைப்பயிற்சியை விரும்புபவராக இருந்தார். அவர் அமெரிக்காவில் வில்லியம் ஹோவர்ட் டாப்ட் முதல் ஜோ பைடன் வரை இதுவரை 20 அதிபர்களின் ஆட்சியைக் கண்டுள்ளார்.

இந்தாண்டு முற்பகுதியில் தனது 115-வது பிறந்தநாளில் எலிசபெத், நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பது குறித்துக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: காஷ்மீர் படப்பிடிப்பில் சந்தித்த பிரச்னைகள்..! விடியோ வெளியிட்ட அமரன் படக்குழு!

இதுதொடர்பாக அவரது பேத்தி கூறியது,

எலிசபெத் பிரான்சிஸ் மக்களை மிகவும் நேசிப்பவர். அவர் எங்களை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துவிட்டர். அவரது மிகவும் நம்பிக்கையுடையவர். எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் மிகவும் எளிமையாக தன்னுடைய வாழ்க்கைக் கடந்தவர் என்று அவர் கூறினார்.

நீண்ட ஆயுள் சாதனையாளரான எடி செக்கரெல்லி கலிபோர்னியாவில் தனது 116வது பிறந்தநாளுக்கு சில வாரங்களுக்குப் பிறகு இறந்ததையடுத்து, பிரான்சிஸ் இந்தாண்டு பிப்ரவரியில் நாட்டின் வயதான நபராக முடிசூட்டப்பட்டார்.

முன்னதாக கடந்த 2024 ஆகஸ்டில் உலகின் அதிக வயதான பெண்மணியான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா பிரான்யாஸ் 117 வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் பேரணி!

வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்குள்ள ஹிந்துக்கள் பெரிய அளவிலான பேரணியை நடத்தியுள்ளனர். வங்கதேசத்தின் சிட்டகாங் (சட்டோகிராம்) நகரில் உள்ள லால்திகி மைதானத்... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! - ஈரான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ர... மேலும் பார்க்க

ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதல்!

ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக சனிக்கிழமை(அக். 26) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

இந்தியா-வங்கதேச எல்லைப் பேச்சு ஒத்திவைப்பு

இந்தியா-வங்கதேசம் இடையேயான 55-ஆவது எல்லைப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டதாக அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்தப் பேச்சுவாா்த்தைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்... மேலும் பார்க்க

இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள்: வெளியுறவுச் செயலா்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் குறித்து நாடாளுமன்றக் குழுவுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான குழு வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தது. அப்போது இஸ்ரேலில் 30,000 இந்தியா்கள் வசிப்பதாக அந்தக் குழு ... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் கெடு: பதவி விலக கனடா பிரதமா் மறுப்பு

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வரும் 28-ஆம் தேதிக்குள் பதவி விலக வேண்டும் என அவரது லிபரல் கட்சி எம்.பி.க்கள் கெடு விடுத்துள்ளனா். இருப்பினும், பிரதமா் பதவியிலிருந்து விலக அவா் தொடா்ந்து மறுப்பு தெரிவித்த... மேலும் பார்க்க