செய்திகள் :

TVK: விஜய்க்குப் பாதுகாப்பு வழங்கும் துபாய் நிறுவனம்; பின்னணி என்ன?

post image

நடிகர் விஜய்யின் த.வெ.க., கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டுக்குப் பாதுகாப்பு வழங்க துபாயைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் பவுன்சர்களை விஜய் நியமித்திருக்கிறார்.

Gentur நிறுவனம்

'Gentur' எனப்படும் துபாய் நிறுவனத்தைத்தான் விஜய் தனது பாதுகாப்புக்காக நியமித்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் பவுன்சர்கள்தான் விஜய்க்கான அத்தனை நிகழ்ச்சிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா, கட்சியின் கொடி அறிமுக விழா என விஜய் சமீபமாக நடத்திய அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் அவர்கள்தான் பொறுப்பேற்றுப் பாதுகாப்பு செய்து கொடுத்திருக்கின்றனர்.

சச்சின், வில் ஸ்மித், ஷாரூக் கான்...

2004-ம் ஆண்டில் துபாயை மையப்படுத்தித் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், உலகம் முழுவதுமே பல நட்சத்திரங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியைச் செய்து வருகிறது. ஹாலிவுட்டில் வில் ஸ்மித், டாம் க்ரூஸ் போன்ற நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சல்மான் கான், ஷாரூக் கான், அமிதாப் பச்சன் ஆகியோருக்கும், விளையாட்டு வீரர்களில் சச்சின், ரொனால்டினோ, கபில் தேவ், வாசிம் அக்ரம் என உச்சபட்ச நட்சத்திரங்கள் பலருக்குமே இந்த நிறுவனம்தான் பவுன்சர்களை இறக்கிப் பாதுகாப்பு வழங்கி வருகிறது.

கமலுக்கு பாதுகாப்பு வழங்கும் Gentur நிறுவனம்

இதுபோக துபாயில் ஐ.பி.எல்., பாணியில் நடக்கும் ILT20 கிரிக்கெட் தொடர், பதான் படத்தின் ப்ரமோஷன் ஈவண்ட்கள், தமிழக முதல்வர் துபாய்க்குச் சென்றபோது அங்கே அவருக்கான பாதுகாப்புகள் எனப் பல ஈவண்ட்டுகளுக்கும் இந்த நிறுவனமே பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.

வி.சாலையில் விஜய்யின் மாநாடு நடைபெறவிருக்கும் திடலையும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே இந்த துபாய் நிறுவனம் தங்களின் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஒரு வாரமாகத் திடலுக்குள் வெளியாட்கள் யாரையுமே அனுமதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துப் பாதுகாப்பை வழங்கியிருந்தனர். விஜய்யைப் பாதுகாப்பாக மேடைக்கு அழைத்து வந்து நிகழ்வை முடித்து அனுப்பி வைப்பதும் இந்த நிறுவனத்தின் பொறுப்புதான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

Tvk Vijay : `மது அருந்தினால் நோ என்ட்ரி, மெக்கானிக் குழு, நெரிசல் தவிர்க்க திட்டம்'- மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவிருக்கும் திடலுக்கு சென்றோம... மேலும் பார்க்க

TVK Vijay: மாநாடு வரை ஒவ்வொரு கி.மீ-க்கும் ஒரு மரம்... பசுமை மாநாடா - சென்னை டு வி.சாலை Live Report!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். மேலும் பார்க்க

TVK Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு; - S.A.C பூர்வீக ஊர் மக்கள் ஷேரிங்ஸ்

அரசியல் களத்துக்குள் விஜய் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டபோதே பல்வேறு விவாதங்கள் தொடங்கியது. தொடர்ந்து, அரசியல் தொடர்பான படங்களில் நடித்தும், அவ்வப்போது சினிமா மேடைகளில் அரசியல் பேசியும் தன்னுடை... மேலும் பார்க்க

TVK: 'பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்..' - மாநாட்டிற்குத் தயாராகும் 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள... மேலும் பார்க்க