தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
தேனி: பெரியகுளத்தில் குடும்பத் தகராறில் மனைவியைக் கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம், வடகரை தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் பிச்சைமணி (43). இவரது மனைவி சரஸ்வதி (38). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
குடும்பத் தகராறால் பிச்சைமணி தனது மனைவியைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், இந்தத் தகராறு காரணமாக சரஸ்வதியை பிச்சைமணி கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த அவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சைமணியை கைது செய்தனா்.