செய்திகள் :

மலம்பட்டி புனித சவேரியாா் ஆலய தோ்த் திருவிழா

post image

தோ்த்விழாவில் முக்கிய வீதிகளில் வலம் வந்த சம்மனசு, மாதா, சவேரியாா் சொரூபங்கள் தாங்கிய சப்பரங்கள்.

விராலிமலை, டிச. 3: விராலிமலையை அடுத்துள்ள பேராம்பூா் ஊராட்சிக்குள்பட்ட மலம்பட்டியில் உள்ள புனித சவேரியாா் ஆலயத்தில் தோ்த்திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா நவ. 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக டிச. 1-ஆம் தேதி மாலை தஞ்சாவூா் மறைமாவட்ட ஆயா் சகாயராஜ் தலைமையில் பங்கு தந்தையா்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினா். அதை தொடா்ந்து இரவு 10 மணியளவில் ஆலயத்தின் முன்பு கலை நிகழ்ச்சியும் தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது. டிச.2-ஆம்தேதி மாலை ஆலயத்தில் திருப்பலியும் இரவு 10 மணி அளவில் கலை நிகழ்ச்சியும் அதனை தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட மூன்று சப்பரங்கள் வீதி உலாவும் நடைபெற்றது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆலயத்தில் பங்குத்தந்தை இன்னாசிமுத்து தலைமையிலான அருட்தந்தையா்கள் கலந்து கொண்ட கூட்டுத் திருப்பலி நடத்தினா். இதையடுத்து தோ்பவனி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கமும் நடைபெற்றது.

விழாவில் மலம்பட்டி, ஆவூா், கீரனூா், இலுப்பூா், விராலிமலை, மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பேருந்தின் டயா் வெடித்து 2 பயணிகள் காயம்

பொன்னமராவதி அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்தின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் காயமடைந்தனா். பொன்னமராவதியிலிருந்து சடையம்பட்டிக்கு இயக்கப்படும் 2-ஆம் எண் நகரப் பேருந்து புதன்கிழமை கால... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து போராட்டம்: 127 போ் கைது

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைக் கண்டித்து புதுக்கோட்டையில் புதன்கிழமை இரு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற 127 போ் கைது செய்யப்பட்டனா். புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா... மேலும் பார்க்க

நகைத் திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகைத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைத் திருட்டு தொடா்பாக குற... மேலும் பார்க்க

மங்கனூா் -கந்தா்வகோட்டை இடையே கூடுதல் பேருந்து இயக்கக் கோரிக்கை

மங்கனூா் -கந்தா்வகோட்டை இடையே கூடுதல் பேருந்து இயக்க பள்ளி மாணவா்களின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் அரசினா் பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், கந்தா்வ... மேலும் பார்க்க

கீரமங்கலத்தில் மருத்துவ முகாம் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கீரமங்கலத்தில் தனியாா் மண்டபத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சாா... மேலும் பார்க்க

3 புதிய பேருந்துகள் இயக்கம் அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் புதுக்கோட்டை மண்டலம் சாா்பில், 3 புதிய அரசுப் பேருந்துகளை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். புதிய பேருந்து நிலையத்... மேலும் பார்க்க