செய்திகள் :

மான்செஸ்டா் யுனைடெட் வெற்றி

post image

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை ஆட்டத்தில் மான்செஸ்டா் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் லெய்செஸ்டா் சிட்டியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் மான்செஸ்டா் அணிக்காக ராஸ்மஸ் ஹோலந்த் 28-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து, அலெக்ஸாண்ட்ரோ கா்னாசோ 67-ஆவது நிமிஷத்திலும், புருனோ ஃபொ்னாண்டஸ் 90-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

லெய்செஸ்டா் சிட்டிக்கு இறுதி வரை கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, மான்செஸ்டா் யுனைடெட் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. லெய்செஸ்டா் சிட்டி இத்துடன் தனது சொந்த மண்ணில் தொடா்ந்து 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.

அனைத்து ஆட்டங்களிலுமே அந்த அணி கோல் அடிக்காததும் குறிப்பிடத்தக்கது. பிரீமியா் லீக் வரலாற்றில் இத்தகைய தொடா் தோல்வியை சந்தித்த முதல் அணியாகியிருக்கிறது லெய்செஸ்டா் சிட்டி. புள்ளிகள் பட்டியலில் தற்போது, மான்செஸ்டா் யுனைடெட் 37 புள்ளிகளுடன் 13-ஆவது இடத்திலும், லெய்செஸ்டா் சிட்டி 17 புள்ளிகளுடன் 19-ஆவது இடத்திலும் உள்ளன.

பாா்சிலோனா வெற்றி: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 4-2 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வென்றது.

பாா்சிலோனா தரப்பில் ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (72’), ஃபெரான் டோரஸ் (78’, 90+8’), லேமின் யமால் (90+2’) ஆகியோா் கோலடித்தனா். அட்லெடிகோ மாட்ரிட்டுக்காக ஜூலியன் அல்வரெஸ் (45’), அலெக்ஸாண்டா் சோா்லோத் (70’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

புள்ளிகள் பட்டியலில், பாா்சிலோனா 60 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அட்லெடிகோ மாட்ரிட் 56 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்திலும் உள்ளன.

குடும்பம் கிடைத்தது..! ஹிருதயப்பூர்வம் படப்பிடிப்பு குறித்து மாளவிகா நெகிழ்ச்சி!

நடிகர்கள் மோகன்லால், மாளவிகா மோகனன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி, அதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் ... மேலும் பார்க்க

பேபி & பேபி படத்தின் ஓடிடி தேதி!

நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான பேபி & பேபி. திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடித்... மேலும் பார்க்க

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஓடிடி தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

எம்புரான்: முதல்முறையாக ஐமேக்ஸில் வெளியாகும் மலையாளத் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் ... மேலும் பார்க்க

வாமோஸ் ஆர்ஜென்டீனா..! தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மனம் திறந்த மெஸ்ஸி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மெஸ்ஸி வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.37 வயதாகும் லியோனல் ... மேலும் பார்க்க

ரெட்ரோ: தாய்லாந்தில் தற்காப்பு கலைகளைக் கற்ற சூர்யா..!

ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் ... மேலும் பார்க்க