தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6.91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழாவில், 31 மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 6.91 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்து, 16 பேருக்கு நவீன செயற்கைக் கால்களும், 15 பேருக்கு கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்களும் வழங்கினாா்.
மேலும், சிறந்த சேவைகளை வழங்கி வரும் தொண்டு நிறுவனத்தினருக்கும், போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கும் பரிசுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் எஸ். கலைவாணி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் சா. ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ். உலகநாதன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.