செய்திகள் :

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

post image

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், 2025 ஆம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள முதலமைச்சர், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | கும்பமேளாவில் உயிரிழந்தவர்கள் பற்றி பிரதமர் மோடி ஏன் பேசவில்லை? - ராகுல் கேள்வி

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளதையும், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தனது கடிதத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க | தொப்பை ஏன் ஏற்படுகிறது? குறைப்பது எப்படி?

விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை விவசாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

பேரவையில் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு முதல்வர் பாராட்டு!

விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், வில்மோருக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்ட... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப... மேலும் பார்க்க

மீண்டும் உயர்ந்த தங்கம்: இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.66 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்திந் விலை கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்... மேலும் பார்க்க

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: இபிஎஸ் வாழ்த்து

சவால்களை எதிர்கொண்டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம்!

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனிப் பெருவிழாவையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க