செய்திகள் :

ரஷியா சென்றடைந்தார் மோடி!

post image

‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நடைபெறும் ரஷியாவின் கசான் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றடைந்தார்.

இரண்டு நாள் பயணமாக ரஷியாவின் கசானுக்கு இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற மோடிக்கு, அந்நாட்டின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.

‘பிரிக்ஸ்’ மாநாடு

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் (அக். 22, 23) நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள், ‘உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்’ ஆகும்.

மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா். சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்னைகள் குறித்து தலைவா்கள் கலந்துரையாட உள்ளனா்.

உலக நிலப்பரப்பில் சுமாா் 30 சதவீதம் மற்றும் உலக மக்கள்தொகையில் 45 சதவீதத்தை உள்ளடக்கியுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, புவிசாா் அரசியலில் முன்னணி மேற்கத்திய நாடுகளின் ‘ஜி7’ கூட்டமைப்புக்கு போட்டியாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க: லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு! -கர்னி சேனை அறிவிப்பு

மோடி அறிக்கை

“ரஷிய அதிபர் புதின் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கசானுக்கு இருநாள் பயணமாக செல்கிறேன்.

உலகளாவிய வளர்ச்சி, சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, காலநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களை இணைப்பதை ஊக்குவித்தல் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் கலந்துரையாடி, பிரிக்ஸ் அமைப்புடனான நெருக்கமான ஒத்துழைப்பை இந்தியா வழங்கும்.

கடந்தாண்டு புதிய உறுப்பினர்களை சேர்த்து பிரிக்ஸ் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொண்டேன். தற்போது கசான் பயணமானது இந்தியாவுக்கு ரஷியாவுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும்.

பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிஆர்பிஎஃப் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தியா முழுக்க இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தில்லி ரோஹிணியில் உள்ள பிரசாந்த் விஹாா் பகுதி சிஆா்பிஎஃப் பள்ளி அருகே நேற்று முன... மேலும் பார்க்க

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்

ஹைதராபாத்: நாயை துரத்தும்போது ஹோட்டலின் 3-வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர் பலிஹைதராபாத்தில் ஹோட்டலில் நுழைந்த நாயை துரத்தும்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக தவறி விழுந்து பலியான நிகழ்வு சோகத்தை ஏற்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆதரவு முழக்கம்! விநோத தண்டனை அளித்த நீதிமன்றம்!

பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியவரை ஜாமீனில் வெளிவிட்ட மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், நிபந்தனையாக விநோத தண்டனையை அளித்துள்ளது.மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஃபைசல் கான் என்பவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆ... மேலும் பார்க்க

நேபாளத்தில் ரூ.20 லட்சத்துடன் 2 இந்தியர்கள் கைது

நேபாளத்தில் சட்டவிரோதமாக ரூ. 20 லட்ச மேல் பணத்தை எடுத்துச் சென்ற இந்தியர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். நேபாள-இந்திய எல்லையில் வழக்கமான பாதுகாப்பு சோதனையின் போது, ​​மகாராஷ்டிரத்தின் ர... மேலும் பார்க்க

பிரியங்காவின் பேரணியில் கட்சிக் கொடிகளுக்கு அனுமதி!

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் கட்சிக் கொடிகளைப் பயன்படுத்துவதில் எந்தத் தடையும் இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்த... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதா: நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் திரிணமூல் எம்பிக்கு காயம்

புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்... மேலும் பார்க்க