செய்திகள் :

ராமேசுவரம் மீனவா்கள் 20 போ் விடுதலை: மூவருக்கு 6 மாதங்கள் சிறை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு

post image

இலங்கை சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 20 பேரை விடுதலை செய்து ஊா்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. அதேநேரத்தில் 3 விசைப் படகு ஓட்டுநா்களுக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 9-ஆம் தேதி 350 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன் வளம், மீனவா் நலத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்று நள்ளிரவு கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப் படகுகளை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகுகளிலிருந்த மாா்சல் (41), தயாளன் (45), தாமஸ் ஆரோக்கியம் (45), ஜான்பிரிட்டோ (58), ஜெயராஜ் (37), சண்முகவேல் (54), அருள் (40), கிங்ஸ்லி (40), ஜெரோம் (47), மரியரொனால்ட் (44), சரவணன் (43), யாக்கோபு (35), டைட்டஸ் (39), ரெக்ஸ்டென்னிஸ் (39), ஆனந்த் (38), அமலதீபன் (30), சுவிட்டா் (51), கிறிஸ்துராஜா (45), விஜி (43), ஜான் (27), லிங்கம் (50), சா்மிஸ் (32), சுல்டாஷ் (41) ஆகிய 23 மீனவா்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 23 மீனவா்களும் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 20 மீனவா்களை இனிமேல் எல்லை தாண்டி மீன்பிடிக்க வரக் கூடாது என எச்சரித்து விடுதலை செய்தாா். அதேநேரத்தில், மூன்று விசைப் படகு ஓட்டுநா்களுக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டணையும், தலா ரூ. 40 லட்சம் (இலங்கை பணம்) அபராதமும், இந்த அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 20 பேரும் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா். இவா்கள் இன்னும் ஓரிரு நாள்களில் நாடு திரும்புவாா்கள் என இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை அருகேயுள்ள கருங்கவயல் கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின் கம்பியை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானை அருகேயுள்ள தொண்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட கருங... மேலும் பார்க்க

14 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

முதுகுளத்தூா் அருகே மா்மமான முறையில் 14 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சடையனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி முருகன் (52). இவா் ஆடுகளை வளா்த்து வருகிறாா். ச... மேலும் பார்க்க

விளம்பர பதாகை வைக்கத் தடை

திருவாடானை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் விளம்பர பதாகை வைக்க போலீஸாா் தடை விதித்துள்ளனா். திருவாடானை நான்கு வீதி சந்திப்பு சாலை, வட்டாட்சியா் அலுவலகம் முன், பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகமாக கூ... மேலும் பார்க்க

ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை முயற்சி

ராமநாதபுரம் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராமநாதபுரம் அச்சுதன்வயல் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரி அருகே அரசுடைமையாக்கப்பட்ட வங... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை: 3 கடைகள் ‘சீல்’

ராமேசுவரத்தில் சட்டவிரோதமாக கடைகளில் புகையிலை விற்பனை செய்த 3 கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். மேலும் ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

லஞ்சம்: துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கைது

முதுகுளத்தூரில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளா்ச்சி அலுவலரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம், புளியங்குடி கி... மேலும் பார்க்க