Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
வங்கி ஊழியா் கொலை வழக்கில் ஒருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் வங்கியின் தற்காலிக ஊழியா் கொலை வழக்கில் போலீஸாா் ஒருவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையம் எதிரே உள்ள சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (45). திருமணமாகாத இவா், வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், கடந்த 28-ஆம் தேதி சந்தைப் பேட்டை தெருவில் இவா் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த தா்மராஜ் மகன் வின்சென்டை (56) ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.