செய்திகள் :

வேலூர் சிறையில் கைதி சித்ரவதை... சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, 2 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்!

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள மாணிக்கம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் தண்டனை பெற்று வந்த சிவக்குமாரை சிறைத்துறை டி.ஐ.ஜி-யின் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதோடு, டி.ஐ.ஜி வீட்டில் இருந்த ரூ.4.25 லட்சம் பணம் காணாமல் போனதற்கும் சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, சிவக்குமாரின் தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

டி.ஐ.ஜி ராஜலட்சுமி

இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தினார். இவரது அறிக்கையின் அடிப்படையில் சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையின் தனி அறையில் 100 நாள்கள் அடைக்கப்பட்டு சித்ரவதைச் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சி.பி.சி.ஐ.டி எஸ்.பி வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 12-ம் தேதி, சேலம் மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட கைதி சிவக்குமாரிடமும், மறுநாள் வேலூர் மத்தியச் சிறை அதிகாரிகளிடமும் நேரில் விசாரணை நடத்தினார் எஸ்.பி வினோத் சாந்தாராம். இதையடுத்து, சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி கடந்த மாதம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் சென்னை புழல்-2 சிறைக்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். சிறைத்துறை டி.ஜி.பி-யும் வேலூர் சிறையில் ஆய்வு மேற்கொண்டார்.

கூடுதல் எஸ்.பி அப்துல் ரகுமான்

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, `கைதியை தாக்கிய சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.ஐ.ஜி உள்ளிட்டோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.ஐ.ஜி ராஜலட்சுமி, கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார் சிறைத்துறை டி.ஜி.பி மகேஸ்வர தயாள்.

திருச்சி: அதிமுக மாவட்டச் செயலாளருக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் ஐ.டி ரெய்டு!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவனுக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.10 - க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ச... மேலும் பார்க்க

நகை, பணத்துக்காக மிளகாய் பொடி தூவி மூதாட்டி கொடூர கொலை... திருப்பூரில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே காரணம்பேட்டையில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (65). இவரது கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டார். இவரது இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் திருப்பூர் மற்றும் பல்லட... மேலும் பார்க்க

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்... மேலும் பார்க்க

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க