செய்திகள் :

"நான் வாழாவெட்டியா இருக்க வேணா.." - மாமியார் கொடுமை பற்றி ஆடியோ அனுப்பி தற்கொலை செய்த இளம் பெண்

post image

கோவை கோயில்பாளையம் சக்தி பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் சுருதி பாபு (24). சுருதி பாபுவுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி திருமணம் நடந்தது.

கொட்டாரம் மின்சார வாரியத்தில் கார்த்திக் வேலை செய்துவருகிறார். இவர்களுக்குத் திருமணம் ஆகி 6 மாதங்களே ஆன நிலையில், நேற்று (அக்டோபர் 22) அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். தனது மாமியார் செண்பகவல்லி தன்னை வெளியிடங்களுக்குப் போகக்கூடாது எனவும், கணவர் சாப்பிட்ட பின்புதான் சாப்பிட வேண்டும் எனவும் கூறி தொடர்ந்து மன உளைச்சல் ஏற்படுத்தி வந்ததாக சுருதிபாபு பெற்றோரிடம் வாட்ஸ் அப் காலில் பேசியிருக்கிறார்.

தற்கொலை

இந்நிலையில் சுருதிபாபுவை வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பெற்றோர் புறப்பட்டு வந்த சமயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்ததாகச் சுருதி பாபுவின் பெற்றோர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் காவல்துறையினர் சுருதி பாபுவின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணம் நடந்து ஆறு மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுருதிபாபு அழுதுகொண்டே கணவரின் தாய் குறித்துப் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சுருதிபாபு கூறியுள்ளதாவது:

ரொம்ப சாரிம்மா. தயவு செய்து அவரை எதுவுமே சொல்லாதீங்க. மறுபடியும் என்னை வீட்டை விட்டு போகச் சொன்னாங்க. அப்பா வீட்டுல கொண்டு போய் விடுவதாகச் சொன்னாங்க. எங்க வீட்ல கொண்டு விட்டால் நான் செத்துப் போவேன்னு சொன்னேன். அவங்க பிடிச்சபிடியா இருக்காங்க. நான் செத்தால் என் பிள்ளைக்கு வேறு யாரும் இல்லை. உனக்கு வேறு குடும்பம் இருக்கிறது என மாமியார் சொன்னாங்க. என்னை கொண்டுபோய் என் வீட்டில் விட்டுவிடு என்றார்கள். வாழாவெட்டியாக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அவருக்கும் (கணவருக்கும்) எனக்கும் இந்நாள் வரைக்கும் ஒரு பிரச்னையும் ஆனதில்லை. இவங்களாலதான் பிரச்னை. என் புருஷன் பக்கத்தில நான் உட்காரக்கூடாது. பக்கத்தில உக்காந்து சாப்பிடக்கூடாது. எச்சில் தட்டை எடுத்து சாப்பிடணும்.

தற்கொலை செய்துகொண்ட சுருதி பாபு தன் கணவருடன்

என்னை மன்னிச்சிரும்மா... என் நகை எல்லாம் ரெண்டு டப்பாவில இருக்கு. அந்த ரெண்டு டப்பாவையும் அவர்கிட்ட கொடுக்கச் சொல்லியிருக்கிறேன். உங்ககிட்ட கொடுத்திருவார். தயவு செய்து வாங்கிக்கோங்க. தமிழ்நாட்டு கலாச்சாரப்படி என்னை இறுதிச்சடங்கு பண்ண வந்தாங்கன்ன அது தேவையில்ல. தயவுசெய்து அப்பிடி பண்ண விட்டுராதீங்க. அவங்க கல்சர்ல எதுவும் நடக்கக்கூடாது. கோயம்புத்தூர்ல கூட்டிட்டு போங்க, இல்ல இங்கேயே பண்ணுங்க. எலக்ட்ரிக்கல் இதுலபோய் சுவிட் ஆன் பண்ணுங்க போதும். இவங்க சொல்றபடி ஒரு மண்ணும் பண்ணி கிழிக்க வேணாம். அம்மா, யோயோ-க்க கல்யாணத்துக்கு எதாவது பண்ணணும்னு இருந்ததுமா. நான் இல்லன்னா என்னோட நகையில எதாவது ஒன்னு அவளுக்குக் கொடுத்திருங்க. அவளைக் கொஞ்சம் பாத்துக்கோங்க. சாரிம்மா, நான் வாழாவெட்டியா இருக்க வேணாம்மா. திரும்பவும் என்னை வீட்டவிட்டு வெளிய போன்னு சொன்னாங்க. அதனாலதான் போறேன்.

இவ்வாறு அந்த ஆடியோவில் சுருதி பாபு உருக்கமாகப் பேசியிருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: "பிஷ்னோய்யை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸுக்கு சன்மானம்" - கர்மி சேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அரசு தன... மேலும் பார்க்க

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணிய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டிஎடுத்து கேரளாவுக்குக் கடத்தும்கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிக... மேலும் பார்க்க