செய்திகள் :

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டி எடுத்து கேரளாவுக்குக் கடத்தும் கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் கன்னியாகுமரி மாவட்டம் வழியாகக் கேரளா மாநிலத்துக்குக் கனிம வளங்களைக் கொண்டு செல்கின்றன.

இந்த லாரிகளால் கன்னியாகுமரி மாவட்ட சாலைகளில் விபத்துகள் அதிகரித்ததைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் கனிம வள லாரிகளுக்கு நேரக் கட்டுப்பாடு, சோதனை சாவடி மூலம் கனரக வாகன சோதனை எனப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், கனிம வளம் கொண்டு செல்ல அரசு சார்பில் பாஸ் வழங்கப்பட்டு, அந்த பாஸ் வைத்திருக்கும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில லாரிகள் அவ்வப்போது விதிகளை மீறிச் செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. 

திருநெல்வேலி புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குநரின் கையெழுத்துடன் போலி சீல்

இந்நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டு லாரிகள் கனிம வளங்களைக் கடத்தி வருவதாக போலீசருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் வடசேரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் லாரியில் கனிம வளம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதிச் சீட்டைச் சோதனை செய்தபோது அந்த பாஸ் போலியாகத் தயாரிக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அரசு முத்திரைகள் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளின் கையொப்பமும் போலியாக இருந்ததும் சோதனையில் தெரியவந்தது.

அந்த சமயத்தில் லாரியின் பின்னால் வந்த இரண்டு சொகுசு கார்களையும் போலீஸார் சோதனை செய்தனர். அந்த காரில், முறை கேடாக அரசு முத்திரையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட போலி பாஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கனிமவள கடத்தல் லாரி

போலி பாஸ் தயாரிக்க அரசு முத்திரையுடன் கூடிய போலி ரப்பர் ஸ்டாம்ப், திருநெல்வேலி புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் கையொப்பம் ஆகியவை அடங்கிய போலி சீல்கள், போலி ரசீதுகள் ஆகியவை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. போலி முத்திரைகளுடன் பிடிபட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் (32), டார்வின் ராஜ் (31), அனீஷ்குமார் (32), டார்லின்ராஜ் (21), ராஜேஷ் (49), வினிஷ் ராஜ் (43), கேரளா மாநிலம் செங்கவிளையைச் சேர்ந்த ரதீஷ் (41) ஆகிய 7 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணிய... மேலும் பார்க்க

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க

`ஜாமீன் கிடையாது' - பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

பாலியல் வழக்கில் சிக்கிய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. முன்னதாக, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் சமயத... மேலும் பார்க்க

``ஓவர் போதையில் இருந்ததால்..." - போலீசை மிரட்டிய வைரல் நபர்கள்; மன்னிப்புக் கேட்கும் வீடியோ

சென்னை மெரினா லூப் சாலையில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று மன்னிப்புக் கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர் சென்னைக் காவல்துறையினர்.`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வ... மேலும் பார்க்க

`உதயநிதியைக் கூப்பிடுவேன்..!' - மெரினாவில் வாக்குவாதம் செய்த நபர்... போலீஸ் விசாரணை!

சென்னையில் நள்ளிரவு நேரத்தில் போலீஸார் ரோந்து பணி, வாகனச் சோதனையில் ஈடுபடுவது உண்டு. சம்பவத்தன்று போலீஸார், மெரினா சர்வீஸ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சாலையில் ... மேலும் பார்க்க

டேட்டிங் ஆப்பில் சிக்கும் இளைஞர்களிடம் பணம் பறிக்கும் மோசடி கும்பல்... விசாரணையில் அம்பலம்!

டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி திருமணம் செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகும் பெண்களிடம் மோசடி செய்வது போன்ற சம்பவங்களும் நடக்கிறது. ஆனால் மும... மேலும் பார்க்க