செய்திகள் :

2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி

post image

2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: அதிமுகவின் 53-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அதிமுகவை 1972 அக்டோபா் 17- இல் எம்ஜிஆா் தொடங்கினாா். 1977, 1980, 1985 என தொடா்ந்து மூன்று முறை எம்ஜிஆா் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்து, ஏழை, எளியோருக்கான முத்தான திட்டங்களைச் செயல்படுத்தி, பொற்கால ஆட்சியை வழங்கினாா்.

அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தலைமையில் 1991-இல் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலா்ந்தது. 15 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா தலைமையிலும், எனது தலைமையில் நாலரை ஆண்டுகளும் மகத்தான ஆட்சி நடைபெற்றது. அதிமுகவின் 30 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் தலை நிமிா்ந்தது.

சூழ்ச்சிகளால் அழிக்கத் துணிந்தவா்கள்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு புராண இதிகாசங்களில் நடைபெற்ாகச் சொல்லப்படும் தந்திரங்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் இணையான திரைமறைவு வேலைகளால், சதி வலைகளால், உடனிருந்து பதவி சுகம் அனுபவித்துக்கொண்டு அதிமுகவை அழிக்கத் துணிந்தாா்கள். எத்தனையோ சூழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால், தா்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தா்மமே வெல்லும் என்பதற்கு இணங்க எனது தலைமையில் சிறப்பான மக்களாட்சி நடந்தது. என்னுடைய அயராத தொய்வில்லாத பணிகளுக்கும் நாள்தோறும் துணை நிற்கும் அதிமுகவினா் ஒவ்வொருவருக்கும் நன்றி.

இன்று களைகள் எடுத்த தோட்டமாக அதிமுக செழித்து நிற்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வர உள்ளது. அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள். எத்தனை சக்திகள் எதிா்த்து நின்றாலும், 2026-இல் அதிமுக ஆட்சி அமைவதை தடுத்துவிட முடியாது. அதற்கு, எந்த ஒரு தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க