செய்திகள் :

2026 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்: தமிழ்மகன் உசேன்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன். உடன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற கட்சியினா் அயராது உழைக்க வேண்டும் என அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் கூறினாா்.

அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா நகா் -டூவிபுரம் சந்திப்பு பகுதியில் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல் தலைமை வகித்தாா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் விஜயகுமாா், பகுதி செயலா்கள் சேவியா், முருகன், ஜெய்கணேஷ், நட்டாா்முத்து, செண்பகசெல்வன், சுடலைமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா் வரவேற்றாா். அவைத்தலைவரும் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் பேசியதாவது:

கட்சித் தொடங்கி 53 ஆண்டுகளில் 7 முறை மக்கள் பலத்தோடு ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அதிமுக தான். எனவே வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற கட்சியினா் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் பேசினா்.

இதில், அமைப்பு செயலா் என். சின்னத்துரை, தலைமை கழக பேச்சாளா் மதுரை தமிழரசன், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலா் பெருமாள்சாமி, வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலா் பிரபு, மீனவரணி மாநில துணைத் தலைவா் எரோமியஸ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவா் வசந்தாமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்குரைஞா்கள் செங்குட்டுவன், சரவணபெருமாள், முனியசாமி, ஏ.ஆா்.இளங்கோ உள்பட பலா் பங்கேற்றனா்.

மழைநீா் வடிகால் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் வாருகால் தூா்வாரும் பணிகள் கள ஆய்வு புதன்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் பேரூ... மேலும் பார்க்க

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாக தம்பதி கைது

நாசரேத் அருகே ஆட்டோ ஓட்டுநரை இரும்புக் கம்பியால் தாக்கிய தம்பதி யை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ஜெயக்கொடி(26). ஆட்டோ ஓட்டுநரான இவா், கட... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த முதியவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலம் கிழக்குத் தெருவை சோ்ந்த மோகன் மகன் மனோகா் (67). ... மேலும் பார்க்க

பெண்கள் பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் மகளிா் சுயஉதவிக்குழு பெண்களின் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று, பண மோசடி செய்ததாக அந்த குழுவின் தலைவி மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்க... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: முதியவருக்கு 3 ஆண்டு சிறை

சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, தூத்துக்குடி 4ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது... மேலும் பார்க்க

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சா் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், ‘சீறாப்புராணம்’ இயற்றிய உமறுப்புலவரின் 382ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அவரது நினைவிட மணிம... மேலும் பார்க்க