அமெரிக்கா: கடந்த வார பணி அறிக்கையைச் சமா்ப்பிக்க அரசுப் பணியாளா்களுக்கு எலான் மஸ...
28 மீ. உயரம்... புதிய சாதனை படைத்த தில்லி மெட்ரோ!
மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உயரமான வழித்தடம் இதுவாகும்.
தில்லியில் 4ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று தீவிரமாக வருகின்றன. இதில் சமய்பூர் - மில்லினியம் சிட்டி சென்டர் - குருகிராம் பகுதிகளை இணைக்கும் வகையில் ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் மெட்ரோ (மஞ்சள்) வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் வெளிவட்டச் சாலையில் அமைக்கப்படும் இந்த மெட்ரோ வழித்தடமானது 28.37 மீட்டர் உயரத்தில் பாலம் அமைத்து திட்டமிடப்பட்டது. இதனை வெற்றிகரமாகவும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் தில்லியில் மிக உயரமான மெட்ரோ வழித்தடம் என்ற சாதனையை கைதர்பூர் பட்லி மோர் மெட்ரோ பெற்றுள்ளது.
இதற்கு முன்பு தெளலா குவான் (பிங்க்) வழித்தடமே மிக உயரமானதாக (23.6 மீட்டர்) இருந்தது. தற்போது அமைக்கப்பட்டுள்ள ஹைதர்பூர் பட்லி மோர் மெட்ரோ வழித்தடம் 52.288 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்