செய்திகள் :

9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

post image

டானா புயல் முன்னெச்சரிக்கையாக ஒன்பது துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தென்கிழக்குப் பருவமழை விடைபெற்றதையடுத்து, கடந்த அக்.15 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதையடுத்து வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான்கடல பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 3 பேர் கைது!

இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

தற்போது ஒடிஸாவின் பரதீப்புக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளுக்கு 770 கி.மீ. தொலைவிலும், வங்கதேசத்துக்கு தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது.

நாளை(அக். 23) புயலாக வலுப்பெறவுள்ளது. இந்த புயலுக்கு டானா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து, அக்.24-ஆம் தேதி வடமேற்கு வங்கக் கடலில் ஒடிஸா - மேற்கு வங்கம் கடற்கரைக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.

இதையும் படிக்க: மெய்யழகன் ஓடிடி தேதி!

இந்த நிலையில் நாளை உருவாகும் டானா புயல் தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூட்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தீபாவளியை கொண்டாட சென்னை தயாரா? காவல் ஆணையர் அருண் விளக்கம்

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லும் நபர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் காவல்துறை மேற்கொண்டுள்ளது.கூட்டத்தை பயன்படுத்தி கூட்ட நெரிசலில் கொ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு சில நாள்களே உள்ள நிலையில் மாநாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜ... மேலும் பார்க்க

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை: இபிஎஸ்

உதயநிதியை துணை முதல்வர் ஆக்கியதுதான் திமுகவின் சாதனை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ... மேலும் பார்க்க

ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மே... மேலும் பார்க்க

நாமக்கல்லில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்பு!

நாமக்கல்லில், மறைந்த திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் திருவுருவச் சிலையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். சிலை திறப்புநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நா... மேலும் பார்க்க