செய்திகள் :

Basics of Share Market 3: BSE, NSE... Sensex, Nifty 50 என்றால் என்ன?!

post image

முதல் அத்தியாயத்தில், 'IPO-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் மற்றும் விற்கும் இடமே பங்குச்சந்தை ஆகும்' என்று பார்த்தோம். இந்த IPO-வை பட்டியலிடும் இடம் ஒன்று இருக்கும் அல்லவா...அது தான் BSE மற்றும் NSE.

ராஜ் தன் துணிக்கடையை பங்குச்சந்தையில் பட்டியலிடலாம் என்று முடிவுக்கு வந்ததும், BSE அல்லது NSE அல்லது இரண்டிலும் பங்குகளை பட்டியலிடுவார். இந்த இரண்டில் எது நமக்கு தோது என்று பார்த்து வாங்கிக்கொள்ளலாம்.

BSE, NSE என்றால் என்ன?

BSE, NSE என்றால் என்ன?

BSE என்றால் Bombay Stock Exchange. NSE என்றால் National Stock Exchange. இவை இரண்டும் பங்குகள் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் ஆகும். இவை இரண்டையும் தாண்டில் சில ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனங்களும் உண்டு. ஆனால், இது இரண்டும் தான் இந்தியாவில் மிக முக்கிய ஸ்டாக் எக்சேஞ்ச் நிறுவனங்கள்.

BSE 1875-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது ஆகும். இதில் கிட்டதட்ட 5,000 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. NSE 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது...இதில் கிட்டதட்ட 2,000 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

'BSE-யில் தான் அதிக நிறுவனங்கள் இருக்கு...அப்போ அது தான் நல்லது. அதுல தான் முதலீடு செய்யணும்' என்று நினைக்க வேண்டாம். BSE, NSE-யை விட சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்னும் சின்ன லாஜிக்கால் தான், அதில் அதிக நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் சில நிறுவனங்கள் BSE, NSE - ஏதோ ஒன்றில் தான் பட்டியலிடும். இப்போது பட்டியலிடப்படும் அனைத்து நிறுவனங்களும், இரண்டிலுமே பட்டியலிட்டு விடுகின்றன.

இன்டெக்ஸ்...

இன்டெக்ஸ்...

பங்குச்சந்தையில் 'இன்டெக்ஸ்' என்ற வார்த்தையை அதிகம் கேட்டிருப்போம். 'அப்படினா?' என்ற கேள்வியும் எழுந்திருக்கும். BSE-யிலோ, NSE-யிலோ பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் பங்கு எப்படி செல்கிறது அதாவது லாபத்தில் செல்கிறதா...நஷ்டத்தில் செல்கிறதா என்பதை காட்டும் நம்பர் தான் 'இன்டெக்ஸ்'.

குழப்பம் வேண்டாம்...இன்னும் தெளிவாக தெரிந்துகொள்வோம். BSE-யில் 5,000 நிறுவனங்களும், NSE-யில் 2,000 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. நாம் இந்த இரண்டில் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், பட்டியலிடப்பட்டிருக்கும் அத்தனை நிறுவனங்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். 'அது சாத்தியமா?' என்று கேட்டால், அவைகளை ஆய்வு செய்ய ஒரு நாள் போதாது. அதனால், இந்த வேலையை எளிதாக்கி BSE மற்றும் NSE-யே நிறுவனங்களின் செயல்பாடுகளை இன்டெக்ஸாக வெளியிடும்.

BSE தன்னில் பட்டியலிடப்பட்டிருக்கும் டாப் 30 நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சென்செக்ஸ் புள்ளியாக வெளியிடும். NSE தன்னில் பட்டியலிடப்பட்டிருக்கும் டாப் 50 நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து நிப்டி50 ஆக வெளியிடும். 'ஏன் குறைந்த அளவிலான நிறுவனங்கள் மட்டும்?' என்றால் தினமும் அனைத்து நிறுவனமும் நன்றாக செயல்படும் என்று எதிர்பார்க்க முடியாது...முடியவும் முடியாது. அதனால் தான், சில அளவுகோல் மூலம் டாப் நிறுவனங்கள் மட்டும் கணக்கிடப்படுகிறன.

இனி என்ன... நாம் இந்த புள்ளிகளை வைத்து புரிந்துகொண்டு, பங்குகளை வாங்கி, விற்க வேண்டியது தான்.

நாளை: பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

Basics of Share Market 6 : பங்குச்சந்தையில் 'நீண்ட கால' முதலீட்டின் அவசியம் என்ன?!

நான், நீங்கள் என பெரும்பாலான சாமனிய மக்கள் பங்குச்சந்தைக்கு வருவதே 'முதலீடு' செய்யத்தான். பங்குச்சந்தையில் எதற்காக முதலீடு செய்ய வேண்டும்? என்பதற்கு முன்பு பார்த்த அத்தியாயத்தில் இருந்து 'அதிக வட்டி வ... மேலும் பார்க்க

ICICI வங்கிக்கு சம்மன் அனுப்பிய SEBI... என்ன ஆச்சு? | IPS FINANCE | EPI - 44

இன்றைய பங்குச்சந்தை நிலவரப்படி நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்த 24,854 புள்ளிகளாகவும், சென்செக்ஸ் 218 புள்ளிகள் அதிகரித்து 81,224 புள்ளிகளோட நிறைவடைஞ்சிருக்கு.இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எ... மேலும் பார்க்க

Basics of Share Market 5 : பங்குச்சந்தையில் SEBI-யின் 'பங்கு' என்ன? | செபி

பங்குச்சந்தையில் தினமும் நீங்கள், நான், சிறிய நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள் என பலர் பணம் போட்டு, லாபம் எடுத்து லட்சம்...கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்து வருகிறது.இதில் யாராவது ஒரு... மேலும் பார்க்க

Basics of Share Market 4 : பங்குச்சந்தையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?!

'பங்குச்சந்தை பத்தி தெரிஞ்சுக்கறதெல்லாம் சரி...நான் ஏன் அதுல முதலீடு செய்யணும்?' என்ற கேள்வி எழலாம். நீங்கள் அரும்பாடுபட்டு சேமிக்கும் பணத்தை பெருக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம். 'பங்குச்சந்தைய... மேலும் பார்க்க