செய்திகள் :

BB Tamil 8: `அருண் சொல்லிக் கொடுத்துதான் அர்ச்சனா டைட்டிலை வென்றாரா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

post image
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன்ல் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரவீந்தர். அவரை சந்தித்துப் பேசினோம்.
ரவீந்தர்

" எனக்கு இதுக்கு முன்னாடி பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. அந்த சமயம் சில காரணங்களால் என்னால போக முடியல. இதுக்கு வர்றேன்னு சொல்லி எல்லாம் பண்ண பிறகு திடீர்னு எங்க அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. சர்ஜரி நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகிற அன்னைக்குன்னு சொல்லிட்டாங்க. இது இரண்டாவது சர்ஜரிங்கிறதனால கொஞ்சம் கிரிட்டிகல் சர்ஜரி தான். ஆனா எங்க அப்பாவுக்கு பிடிச்ச ஷோ இது. அப்பா குணமாகிடுவார் நீங்க போங்கன்னு என் ஃபேமிலி கொடுத்த நம்பிக்கை தான் அங்க போனதுக்கான காரணம். தவிர, அவருக்குப் பிடிச்சதை செய்றோம் அப்படிங்கிற எண்ணத்திலும் போனேன்.

நாங்க 6 பேரும் போனதும் ஏன் வீடு ஓப்பன் ஆச்சுன்னா, சாச்சனா ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணனும்னு சொன்னாங்க. அதுக்காக மட்டும் தான் வீடு ஓப்பன் ஆச்சு. அதுல இருந்து கேம் ஆரம்பிச்சிடுச்சு. ஒவ்வொருத்தருக்கும் இன்னொருத்தர் மேல ஒரு பயம் இருக்கு. சாச்சனாவுக்கு நடந்த சாப்பாடு விஷயம் எனக்கும் நடந்திருக்கு. அந்த வீட்ல எனக்கு பாடி ஷேமிங் நடந்திருக்கு. குண்டா, தடியான்னுலாம் என்னையும் கிண்டல் பண்ணியிருக்காங்க. ரஞ்சித் சார் கண்ணு, சாமின்னு வெளியில பேசிக்கிட்டாலும் எங்களுக்குள்ள ஒரு கோல்டு வார் தெரியும். 

Bigg Boss Ravindar - ரவீந்தர்

இவங்க என் உடம்பை சொல்றதுக்கு நான் என் மூளையை பயன்படுத்த வேண்டியிருந்தது. என் மீது உண்மையாகவே அக்கறை இருந்தா என்னை மோட்டிவேட் தான் பண்ணியிருக்கணும். முத்துக்குமரன் அதை செஞ்சான். பலரும் முத்து என் இடத்தை ரீப்ளேஸ் பண்ணதா சொல்றாங்க. உண்மையில் முத்து என் இடத்தை ரீப்ளேஸ் பண்ணல. அவன் என்னை விட திறமையுள்ளவன். உன்கிட்ட தோத்துப் போறது பெருமைன்னு சொல்லுவோம்ல அதுமாதிரியான ஆள். வெளியில வர்றப்ப கூட விட்டுறாதடா குமரான்னு சொல்லியிருப்பேன். அவன்கிட்ட புரிதல், உடல் வலிமை, மனவலிமை எல்லாம் இருக்கு. ப்ரோ கபடிக்கு 3 முறை முயற்சி செய்து செலக்ட் ஆகாத ஸ்டேட் லெவல் கபடி பிளேயர் அவன். அவனுடைய நிதானமும், சிந்தனையும் சரி. ஆனா, சீக்கிரமா ஒரு செயல் செய்து வெறுப்பை சம்பாதிக்கிற மீடியா ஜிமிக் தெரியாத பையன். ஒருசிலரை ஒரு சிலருக்குப் பிடிக்கும். கொஞ்ச நாளில் முத்துக்குமரனை தமிழ்நாட்டுக்கே பிடிக்கும்" என்றவரிடம் அருண் குறித்துக் கேட்டோம்.

"உங்ககிட்ட ஒரு ஷாக்கிங் நியூஸ் சொல்றேன். கேம் முடிஞ்சு நான் வெளியில வந்ததும் எனக்கு ஃபோன் பண்ணினது அர்ச்சனா தான். அர்ச்சனாவும் அருணும் ஃப்ரெண்ட்ஸ்னு எனக்குத் தெரியாது. அவங்க நான் நல்லா ஆடினேன்னு சொல்லிட்டு, `அருண் இப்படி ஆடுறதைப் பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்கு. போன தடவை அருணுக்கு தான் இந்த வாய்ப்பு வந்தது. அவன் தான் என்னை போக சொல்லி எனக்கு இந்த கேமை எப்படி விளையாடணும்னு சொல்லிக் கொடுத்தார்.’ என்றார். என்னது அவன் சொல்லிக் கொடுத்து டைட்டில் வின் பண்ணியாங்கிற மாதிரி அதிர்ச்சியாகத்தான் எனக்கு இருந்தது. அவன் நல்ல பையன். அதை நான் அர்ச்சனாகிட்டேயும் சொன்னேன். ஆனா, அவன் இன்னசென்ட் ஆக நடிக்கிறார்.

ரவீந்தர்

பாரதி கண்ணம்மா முடிஞ்சிடுச்சுல பார்ட் 2ம் இல்லைல்ல பிறகு எதுக்கு? இன்னமும் அதையே மெயின்டெயின் பண்ணனும்னு நினைச்சா எப்படி?" என்றவர் இன்னும் பல விஷயங்கள் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

Kayal & Siragadikka aasai: உயிருக்குப் போராடும் மூர்த்தி | ரோகிணியின் அடுத்த வில்லத்தனம்

சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் வில்லத்தனம் செய்வதில் ரோகிணி விஜயாவை முந்திவிட்டார். விஜயா படபடவென பேசுவார். மற்றபடி திருட்டு வேலைகள் செய்வது, சதி செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யமாட்டா... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 15: ஆண்கள் போட்ட டீலை, டீலில் விட்ட பிக் பாஸ்; இந்த வாரம் Mixed Nomination!

இப்போதைக்கு பெண்கள் அணியின் பக்கம் காற்று நன்றாக வீசுகிறது. தர்ஷிகா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகி விட்டார். ஆண்கள் அணியில் இரண்டு பேர் குறைந்து எண்ணிக்கையில் சுருங்கி விட்டார்கள். எனவே, ‘ஆண்கள் யாரையு... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ``அந்த சம்பவத்துக்குப் பிறகு என் ரஞ்சித் சிரிக்கவே இல்ல..!" - ப்ரியா ராமன்!

பிக் பாஸ் சீசன் 8 நடந்துக் கொண்டிருக்கிறது. `ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு' என தன்னுடைய பாணியில் களத்தை அழகாக நகர்த்தி கொண்டுபோகிறார், விஜய் சேதுபதி.முதல் வாரத்தில் சத்தமில்லாமல் அமைதியாகவே இருந்த ரஞ்ச... மேலும் பார்க்க

`சீதாவுக்குப் பதில் சுஜிதா' - சமையல் நிகழ்ச்சியில் நடத்த மாற்றத்தின் பின்னணி என்ன?

ஜீ தமிழ் சேனலில் சில தினங்களுக்கு முன் தொடங்கிய 'கிச்சன் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியிலிருந்து நடிகை சீதா வெளியேறியிருக்கிறார். அவருக்குப் பதில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் நடித்த நடிகை சுஜிதா கமிட் ... மேலும் பார்க்க

நடிக்க வரும் முன்பே வில்லங்கம், வெளிநாட்டு ரசிகையுடன் காதல் - அர்னவைத் தொடரும் சர்ச்சைகள்

பிக்பாஸ் சீசன் 8 ல் இரண்டாவது வார எவிக்‌ஷன் நிகழ்ந்து அர்னவ் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போது, 'உங்களுக்கு ஏதாவது நல்லது நடந்ததுன்னா, வாயாலேயே அதைக் கெடுத்துடாதீங்க' என விஜய... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: ஆரம்பமான அடுத்த நாமினேஷன்; அணி மாறும் சாச்சனா, ஜெஃப்ரி; அடுத்து என்ன நடக்கும்?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் இன்றைய நாளுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியாகி இருக்கின்றன.பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்... மேலும் பார்க்க