செய்திகள் :

Bigg Boss Tamil 8: `வெளியேறிய அர்னவ்’ - சக போட்டியாளர்கள் போட்ட ஸ்கெட்ச் தான் காரணமா?

post image

மெது மெதுவாக சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது பிக்பாஸ் தமிழ் சீசன் 8. ரவீந்தர், தீபக், ரஞ்சித், சௌந்தர்யா உள்ளிட்ட பதினெட்டு போட்டியாளர்களுடன் அக்டோபர் 6-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் எவிக்‌ஷனில் ரவீந்தர் வெளியேறி விட்டார்.

இரண்டாவது வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் இன்று நடந்தது. இந்த வாரம் வெளியேறுவதற்கான நாமினேஷன் பட்டியலில் வி.ஜே.விஷால், தர்ஷா குப்தா, ரஞ்சித், ஜெப்ரி உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இவர்களில்  ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் அர்னவ் வெளியேற்றபட்டுள்ளதாக  நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அர்னவ்

அர்னவைப் பொறுத்தவரை அவரது பிக்பாஸ் என்ட்ரியே பரபரப்பாகப் பேசப்பட்ட  ஒன்றுதான். ஏனெனில், எந்த அன்ஷிதாவுடன் சேர்ந்து கொண்டு தன்னைத் துன்புறுத்துகிறார் என இவர் மீது இவர் மனைவி குற்றம் சுமத்தினாரோ, அதே அன்ஷிதாவையும் இவரையும் ஒருசேர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினார்கள்.

'குடும்பப் பிரச்னையையெல்லாம் யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்' என நினைத்தார்களா என்னவோ தெரியாது, ஆனால் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் தங்கள் பழைய பிரச்னைகள் குறித்துப்  பேசாமல்தான் இருந்தனர்.

ஒருபடி மேலே போய், 'முதல் வாரமே அன்ஷிதாவை நாமினேட் செய்தார் அர்னவ். ஆனால் அப்போதே  இவர்கள் குறித்து டீடெய்லை கையில் வைத்திருந்தது போல், 'அர்னவ் ஏதோ பிளான் வச்சிருக்கார்' என்றார் சௌந்தர்யா.

அர்னவ் அன்ஷிதா இருவரும் தங்களது பர்சனல் குறித்து அந்த வீட்டுக்குள் பேசாத போதும், வெளியில் அர்னவ் அவரது மனைவி திவ்யா அன்ஷிதா மூன்று பேரும் கான்பெரன்ஸ் காலில் சண்டை போட்ட பழைய ஆடியோ மறுபடியும் ஒரு ரவுண்டு வரத் தொடங்கியது. அரனவ் வுக்கு நிகழ்ச்சியில் குறைந்த ஆதரவே கிடைத்ததன் பின்னனியில் நிச்சயம் இந்த ஆடியோவுக்குப் பங்கிருக்கும் என்கிறார்கள்.

அர்னவ் - அன்ஷிதா

இந்த ஆடியோ ரீ ரவுண்டின் பின்னணியில் திவ்யா இருப்பதாக அர்னவின் நட்பு வட்டத்தினர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால் அர்னவ் நிகழ்ச்சிக்குள் செல்லும் போதே பி.ஆர். வேலை செய்யச் சொல்லி சிலரை நியமித்து விட்டுப் போனதாகவும், இதைத் தெரிந்து கொண்ட மற்ற சில போட்டியாளர்களின் பி.ஆர். டீமே அந்த ஆடியோ பரப்பும் வேலையைச் செய்ததாகவும் அடித்துக் கூறுகிறது இன்னொரு தரப்பு.

எது எப்படியோ ஜென் மோடில் அந்த வீட்டுக்குள் வலம் வந்து கொண்டிருந்த அர்னவ் வெளியேறி விட்டார் என்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

புதிய தொகுப்பாளர், பெரிய வீடு, மற்றும் ‘ஆண்கள் Vs பெண்கள்’ - பரபரப்பாக நடந்து வரும் பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6 ஆம் தேதி பிரம்மாண்டமாக 5 மணி நேர தொடக்கவிழாவுடன் துவங்கியது.புதிய தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று, பரவலான பாராட்டுகளைப் பெற... மேலும் பார்க்க

``கல்யாணம் தொடர்பான செய்தி, ரெண்டு பேர் குடும்பத்தையுமே பாதிக்குது” - 'பாக்கியலட்சுமி' திவ்யா கணேஷ்

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றுபாக்கியலட்சுமி. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக நல்ல டி.ஆர்.பியும் கிடைத்து வருகிறது. இ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 8: `அதைபோய் கிண்டல் பண்ணினா என்ன பண்றது?' - ரஞ்சித் குறித்து மனைவி பிரியா ராமன்

`பிக்பாஸ் தமிழ் சீசன் 8' பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் `நச்' கவனிப்பு பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் ரஞ்சித். இவருடைய கேம் பி... மேலும் பார்க்க

Kayal Serial: கல்யாணமே முடிஞ்சாச்சு… கயல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? - `ட்விஸ்ட்’ வைக்கும் சைத்ரா

கயல் சீரியலில் நாயகி கயலுக்கும் நாயகன் எழிலுக்கும் ஒருவழியாகத் திருமணம் முடிந்துவிட்டது. சுமார் ஒரு மாத காலமாக கயல் சீரியலில் இந்த திருமணம் தொடர்பான காட்சிகள் தான் ஒளிபரப்பட்டது.சீரியல் இந்த கட்டத்திற... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 12: வெடித்த விவகாரம்; சர்ச்சையான அவார்ட் ; வெளியேறப்போவது யார்?

‘சின்னக் காலா இருந்தாலும் நல்லாயிருக்குடா’ என்று ‘காக்கா பிரியாணி’ நகைச்சுவைக் காட்சியில் விவேக் சொல்லுவார். அதைப் போலவே இன்றைய எபிசோடில் எப்படியோ கொஞ்சம் சுவாரசியம் வந்து விட்டது. இப்படியே வண்டியை நக... மேலும் பார்க்க

Serial Update: எதிர்நீச்சல் 2 - `இவருக்கு பதில் இவர்’ டு சன் தொடரில் இவர்களா?

`இவருக்கு பதில் இவர்’எதிர்நீச்சல் 2சன் டிவியில் ஒளிபரப்பான தொடர் `எதிர்நீச்சல்'. இந்தத் தொடருக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இந்தத் தொடர் சில காரண... மேலும் பார்க்க