செய்திகள் :

Bigg Boss Tamil 8: `standby arunprasath' - வீடியோ பகிர்ந்து அருணுக்கு ஆதரவளித்த அர்ச்சனா

post image

நன்றி: விகடன்இணையதளம்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 அக்டோபர் 6ம் தேதி ஒளிபரப்பாகத் தொடங்கியது. அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா, பவித்ரா ஜனனி உள்ளிட்ட பதினெட்டுப் பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.
Bigg Boss Tamil 8

அடுத்த 24 மணி நேரத்தில் சாச்சனா வெளியேறினார். மீண்டும் அவர் நிகழ்ச்சிக்குள் வந்து விட்டதால், அந்த அதிரடி எவிக்‌ஷன் ஏன் நடந்தது என இதுவரை யாருக்கும் தெரியவில்லை.தொடர்ந்து முதல் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் பிக்பாஸ் செட்டில் நடந்தது. விஜய் சேதுபதி கலந்து கொண்ட ஷூட்டிங்கின் இறுதியில் எவிக்ட் ஆகி, முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்  தயாரிப்பாளர் ரவீந்தர்.

பாரதி கண்ணம்மா அருண்

தொடர்ந்து இரண்டாவது வார  எவிக்‌ஷனில் நடிகர் அர்னவ் வெளியேற, தற்போது ஆண்கள் அணியில் 7 பேர் பெண்கள் அணியில் 9 பேர் என மொத்தம் பதினாறு போட்டியாளர்கள் அந்த வீட்டில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சீசனின் டைட்டில் வின்னரும், போட்டியாளர் அருணின் தோழியுமாக அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்திருக்கிறார். அந்த வீடியோவில் விஜய் சேதுபதி பிக் பாஸ் ஹவுஸ்மேட்டான அருணைக் கண்டிப்பது போன்ற காட்சிகளும் சக போட்டியாளர்களிடம் அருண் தன்மையாக நடந்து கொள்ளும் காட்சிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

அர்ச்சனாவின் பதிவு

அந்தக் காட்சியில் நடிகர் அருணிடம் பேசிய ஒரு வேளையில் அவரை 'ஆண்கள் அணியின் சொம்பு தூக்கி'  எனப் பொருள் படும்படி பேசியிருந்தார் விசே.

பிக்பாஸ் அர்ச்சனா

அந்த வீடியோவை ஷேர் செய் `standby arunprasath' என்ற ஹேஷ்டேக்கையும் வைத்திருக்கிறார். நடந்து முடிந்த இரண்டு எவிக்‌ஷனின் போதும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாண்ட விதம் குறித்து சிலர் பாராட்டுவதும், சிலர் மிகுந்த கண்டிப்புடன் நடந்து கொள்கிறார் என்றும் இரண்டு விதமாகப் பேசிவருகின்றனர். இதுகுறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்.

Serial Update: `அன்று வருத்தம்; இன்று வாய்ப்பு'- சன் டி.வியின் புதிய சீரியல்; மீண்டும் இணையும் ஜோடி

குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி சினிமா, சீரியல் என இப்போது வரை பிஸியாக இருப்பவர் நீலிமா ராணி. சன், ஜீ தமிழ் உள்ளிட்ட முக்கிய சேனல்கள் எல்லாவற்றிலும் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகி உள்ளன.ஆரம்... மேலும் பார்க்க

Kayal & Karthigai Deepam: தீபாவை நெருங்கும் பேராபத்து | மூர்த்தி பற்றி அறியும் கயல்?

கயல்-எழில் திருமணம் முடிந்தும் நிம்மதி கிடைக்காதுபோல. இந்த சீரியலில் மட்டும் தான் தினமும் ஒரு புது பிரச்னை வருகிறது. கயலின் அண்ணன் மூர்த்தி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 16: முத்துவோட லவ் ஸ்டோரி; என்னை அக்கான்னு கூப்பிடறாங்க - தர்ஷாவின் சிணுங்கல்

இன்றைய எபிசோடு சற்றாவது சுவாரசியமாக அமைந்ததற்கு காரணம், ‘ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்’. ஆண்கள் போட்ட டீலை, ‘குத்தினா கத்துவேன், கத்தினா குத்துவேன்’ என்கிற மாதிரி ராஜதந்திரத்துடன் கையாண்டு பெண்கள் அணி டபாய்த்... மேலும் பார்க்க

BB Tamil 8: `தோழி செளந்தர்யாவுக்கு நான் சொல்லி அனுப்புன விஷயம்'- `பிக் பாஸ்' விஷ்ணு சொல்வதென்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 8 கொஞ்சம் கொஞ்சமாக விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர் அருண், நடிகை பவித்ரா, மாடல் சௌந்தர்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்களுடன்... மேலும் பார்க்க

Kayal & Siragadikka aasai: உயிருக்குப் போராடும் மூர்த்தி | ரோகிணியின் அடுத்த வில்லத்தனம்

சிறகடிக்க ஆசைசிறகடிக்க ஆசை சீரியலில் வில்லத்தனம் செய்வதில் ரோகிணி விஜயாவை முந்திவிட்டார். விஜயா படபடவென பேசுவார். மற்றபடி திருட்டு வேலைகள் செய்வது, சதி செய்வது, ஏமாற்றுவது போன்ற செயல்களைச் செய்யமாட்டா... மேலும் பார்க்க

BB Tamil 8: `அருண் சொல்லிக் கொடுத்துதான் அர்ச்சனா டைட்டிலை வென்றாரா?' - ரவீந்தர் ஓப்பன் டாக்

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசன்ல் இரண்டாவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ரவீந்தர். அவரை சந்தித்துப் பேசினோம்.ரவீந்தர் " எனக்கு இதுக்கு முன்னாடி ... மேலும் பார்க்க