செய்திகள் :

Lawrence Bishnoi: சல்மான் கானை கொல்லத் துடிக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் - யார் இந்த கேங் லீடர்!

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 26 வருடங்களுக்கு முன்பு, செய்த தவறு, இப்போது அவரை துப்பாக்கிமுனையில் துரத்திக் கொண்டு இருக்கிறது. 1998-ல் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் 2 மான்களை சல்மான் கான் வேட்டையாடிய சம்பவம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் குற்றவாளி என்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1998-ல் அந்த சம்பவம் நடந்தபோது, 5 வயது சிறுவனாக இருந்த ஒருவர், இப்போது சல்மான் கானை கொல்ல துடித்துக் கொண்டிருகிறார். அந்த சிறுவன் குறித்து நாடுகளும் பேசத் தொடங்கியிருக்கின்றன. யார் அந்தச் சிறுவன்? உலக நாடுகள் ஏன் அவனைப் பற்றி பேசுகின்றன? சல்மால் கானை கொல்லத் துடிப்பது ஏன் என்பது குறித்து பார்ப்போம். 

'கேங்' லீடர் லாரன்ஸ் பிஷ்னோய் :

அந்தச் சிறுவன், இப்போது 31 வயது இளைஞன். மோஸ்ட் வான்ட்டட் நொட்டோரியஸ் கிரிமினல் கும்பலின் தலைவனான லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப்பில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான் பிஷ்னோய். கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரம்பரை நிலம் கொண்ட குடும்பம் பிஷ்னோயின் குடும்பம். சண்டிகர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதுதான், அவரது வாழ்க்கைப் பாதை மாறுகிறது. மாணவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகிறார். அதனால், ஏற்பட்ட மோதல்கள் கொலை முயற்சி வழக்கு வரை லாரன்ஸ் பிஷ்னோயை கொண்டு சேர்க்கிறது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். 

சிறையில் கிரிமினல்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. வெளியே வந்து கொலை, ஆள்கடத்தல், பணம் பறிப்பு என கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு ஒரு கேங்ஸ்டராக உருவெடுக்கிறார் லாரன்ஸ் பிஷ்னோய்.

கேங்ஸ் ஆஃப் பஞ்சாப்:

பஞ்சாபில் ஏகப்பட்ட கிரிமினல் கேங்குகள் இருக்கின்றன. அவர்களையெல்லாம் பொதுவாக இணைப்பது, போதைப் பொருட்கள், ஆயுதக் கடத்தல், ஆள்கடத்தல், இவற்றோடு சேர்த்து பாப் இசையும், உள்ளூர் சினிமாவும். பஞ்சாப் பாப் மியூசிக்கில் இருப்பவர்களுக்கும், போதை பொருட்களுக்கும் மிகுந்த தொடர்பிருக்கிறது. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை, இந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

போதைப் பொருள், பாப் இசை போன்றவை இளைஞர்களை எளிதாக, கிரிமினல் கும்பல்களை நோக்கி இழுக்கின்றன. இவற்றோடு சேர்த்து, மேலும் ஒரு விஷயமும் இருக்கிறது. அதுதான், இளைஞர்கள் மத்தியில், லாரன்ஸ் பிஷ்னோயை ஒரு ஐகானாக நிலை நிறுத்தியிருக்கிறது.

லாரன்ஸ் கேங் உலகளவில் ரீச் ஆனது எப்படி?

பருத்திவீரன் படத்தில், கார்த்தி ஒரு டைலாக் பேசுவார். "இப்படியே கமுதி கோர்ட்டு ஜெயில்னு சுத்திட்டு இருந்தா எப்படி... ஏதாவது பெருசா செஞ்சுட்டு மெட்ராஸ் ஜெயில பார்த்துடணும் சித்தப்பா" என்பார். அந்த டைலாக்கை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறது, இந்த பிஷ்னோய் கேங். அந்த கேங்குக்கு 3 இலக்குகள் இருக்கின்றன.

1. கேங்கின் பெயரை பிரபலப்படுத்துவது 

2. கேங்கின் பெயரைக் கேட்டாலே பயம் வர வைப்பது

3. மற்ற கேங்கின் ஏரியாவுக்குள் செல்வாக்கை செலுத்துவது.

இந்த இலக்குகளை படிப்படியாக செய்து கொண்டிருக்கிறது. அதுவும் திட்டமிட்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதை செயல்படுத்தும் சில முக்கிய சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.

பெயரை பிரபலப்படுத்துவது:

2018-ல் சல்மான் கான் மான்களை வேட்டையாடிய வழக்கில் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்ற நேரத்தில், "சல்மானை நிச்சயம் கொல்வோம்" என பேட்டி கொடுத்தார் லாரன்ஸ் பிஷ்னாய். அந்த பேட்டி இந்தியா முழுவதும், பேசு பொருளானது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், சல்மான் கான் வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சல்மான் கானுக்கு அதில் ஒன்றும் ஆகவில்லை. சல்மானை தொடர்ந்து குறி வைப்பதால், பிஷ்னோய் கேங் அவ்வப்போது பேசுபொருளாகிவிடுகிறது.

கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையின் மையப்புள்ளியாகவும் பிஷ்னோய் கேங்தான் இருக்கிறது. 2023 ஜூலையில், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அந்த கொலையில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும், பிஷ்னோய் கேங் போன்ற கிரிமினல் குழுக்களுக்கு, உளவு அமைப்பான RAW, தகவல்கள் திரட்டி கொடுப்பதாகவும், அதை வைத்து அந்த குழுக்கள் கனடாவில் வசிக்கும் சீக்கியர்களை குறிவைத்து கொல்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தியா அந்த குற்றச்சாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளன.

இந்த விவகாரத்தில் கனடா அரசு பிஷ்னோய் கேங்கின் பெயரைப் பயன்படுத்தியது, சர்வதேச அளவில் அந்த கேங்குக்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்திவிட்டது. 

பயத்தை ஏற்படுத்துவது:

சமீபத்தில், மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பாபா சித்திக் கொல்லப்பட்டதில், பிஷ்னோய் கேங்க்குக்கு தொடர்பிருப்பது தெரியவந்திருக்கிறது. சல்மான் கானின் நெருக்கமான நண்பராக இருந்ததால் அவர் கொல்லப்பட்டதாக் பிஷ்னோய் கேங்கைச் சேர்ந்த ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். பஞ்சாபில் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக கைதாகி சிறையில் இருக்கிறார் லாரன்ஸ்.    

இப்படி பரபரப்பை ஏற்படுத்துற முக்கிய கொலைகள் மூலமாக, மற்ற கேங்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதை யுக்தியாகவே வைத்திருக்கிறது பிஷ்னோய் கேங்.

'கேங்' வார்:

பாபா சித்திக் கொலைக்கு, சல்மான் கானுடனான தொடர்பு ஒரு காரணமாக இருந்தாலும், அவரின் கொலை மூலமாக தாவூத் இப்ராஹிமுக்கு ஒரு மெசேஜ் அனுப்புவதும் உள் நோக்கம் என்று கூறப்படுகிறது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில், மும்பையில் தாங்கள் கால் பதித்துவிட்டோம் என்று வெளிப்படுத்தவே, சித்திக் கொலைசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  

சரி சல்மான் கானை, பிஷ்னோய் கேங் கொல்லத் துடிக்க ஒரு காரணம் இருக்கிறது. அது குறித்து தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோவை க்ளிக் செய்து பாருங்கள்...

திருமணம் மீறிய உறவு... சந்தேகத்தில் பெண்ணை அடித்துக் கொலை செய்த இளைஞர்!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வசித்து வந்த ராணிக்கும் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு... மேலும் பார்க்க

Baba Siddique murder: பிஷ்னோய் கூட்டாளிகள் 5 பேர் கைது; குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான் கான்!

மும்பையில் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அவரது மகன் அலுவலகத்திற்கு வெளியில் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 2 பேர் உள்பட நா... மேலும் பார்க்க

Pannun Murder Plot : முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி - யார் இந்த விகாஸ் யாதவ்?

அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்தி... மேலும் பார்க்க

நெல்லை: தனியார் நீட் பயிற்சி மையத்தில் சித்ரவதை - மாணவர்களை சரமாரியாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி

நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற விவகாரம் ஒரு பக்கம் விவாதமாக நீளூம் நிலையில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உயிரிழப்புகள் நடந்து வருவதும் சர்ச்சையானது. அத்துடன், சாதாரண ஏழை, எளிய மக்களும் த... மேலும் பார்க்க

ஹோட்டலில் வேலைசெய்த சிறுவர்கள்மீது தாக்குதல்; அறைக்குள் அடைத்த உரிமையாளர் கைது! - என்ன நடந்தது?

சென்னை மேற்கு கே.கே.நகர், ஜவஹர் தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர், கே.கே.நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டலில் நேபாளத்தைச் சேர்ந்த 16, 17 வயதுடைய மூன்று சிறுவர்கள் கடந்த ஆற... மேலும் பார்க்க

2 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த பெண்; காவலரான கணவரிடம் விசாரணை - சேலத்தில் சோகம்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவர் கோவிந்தராஜ் (வயது 38). இவரது மனைவி பெயர் சங்கீதா (வயது 22). இவர்களுக்கு தர்ஷினி (வயது 4), ... மேலும் பார்க்க