செய்திகள் :

ONGC-ல் 2236 பயிற்சி பணியிடங்கள்... 10th, +2, ITI, Diploma, Degree படித்தவர்கள் கவனத்துக்கு..!

post image

10th, +2, ITI, Diploma, Degree படித்தவர்களுக்கு, பொதுத்துறையைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ONGC நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஒருவருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது.

மொத்தம் பயிற்சி பணியிடங்கள்: 2236

பயிற்சி இடங்கள்: தமிழ்நாட்டில் கடலூர், மைலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ONGC நிறுவனங்களில் பயிற்சி வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். இது குறித்த விவரங்களை பார்ப்போம்.

காலியிட விவரங்கள் – கல்வித்தகுதி

அட்டவணை

Trade Apprentices - 10th , +2

Trade Apprentices பயிற்சிக்கு உதவித்தொகையாக  ரூ.7,000 பயிற்சி வழங்கப்படும். இதில்,  

1) Library Assistant

2) Cabin/Room Attendant

3) Dresser (Medical)

4) House Keeper (Corporate)

5) Office Assistant

ஆகிய டிரேடுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் Office Assistant பிரிவிற்கு மட்டும் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Trade Apprentices - ITI

1) Mechanic Auto Electronics

2) Computer Operator and Programming Assistant (COPA)

3) Draughtsman (Civil)

4) Electrician

5) Electronics Mechanic

6) Fitter

7) Information & Communi- cation Technology

8) System Maintenance

9) Instrument Mechanic

ONGC -ல் 2236 பயிற்சி பணியிடங்கள்...

10) Fire Safety Technician (Oil & Gas)

11) Machinist

12) Mechanic Automobile (Advanced Diesel Engine)

13) Mechanic (Motor Vehicle)

14) Mechanic (Diesel)

15)Medical Laboratory Technician (Cardiology and Physiology)

16) Medical Laboratory Technician (Pathology)

17) Medical Laboratory Tech- nician (Radiology)

18) Refrigeration and Air Condi- tioning Mechanic

19) Stenographer (English)

20) Surveyor

21) Industrial Welder (Oil & Gas)

ஆகிய பிரிவுகளுக்கு சம்பந்தப்பட்ட டிரேடில் ITI படித்திருக்க வேண்டும் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும். உதவித்தொகையாக ரூ.7,700 வழங்கப்படும். 

Diploma Apprentices

1) Civil

2) Computer Science

3) Electronics & Telecommu- nication

4) Electrical

5) Electronics

6) Mechanical

7) Fire Safety

ஆகிய பிரிவுகளுக்கு, சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் டிப்ளமோ என்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். பயிற்சி உதவித்தொகையாக ரூ.8,050 வழங்கப்படும்.

ONGC -ல் 2236 பயிற்சி பணியிடங்கள்...

Graduate Apprentices

1) Accounts Executive

2) Lab Assistant (Chemical Plant)

3) Data Entry Operator

4) Store Keeper

5) Secretarial Assistant

6) Petroleum Executive

ஆகிய பிரிவுகளுக்கு,  Account Executive பிரிவிற்கு B.Com. பட்டபடிப்பு , Lab Assistant (Chemical Plant) B.Sc. Chemistry , Petroleum Executive பிரிவிற்கு B.Sc. Geology பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி உதவித்தொகையாக ரூ.9,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் செய்பவர்கள்,

Trade Apprentices பயிற்சிக்கு www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும்.

Technician மற்றும் Graduate Apprentices பயிற்சிக்கு www. nats.education.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் www. ongcapprentices.ong.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணபிக்க கடைசிநாள்:  25-10-2024

சம்பந்தப்பட்ட படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கபடுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்களின் விவரங்கள் 15-11-2024 அன்று இணையதளத்தில் வெளியாகும். மேலும் மின்னஞ்சல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

மேலும் முழு விவரங்களுக்கு ONGC Apprentice Notification 2024 இந்த லிங்கை கிளிக் செய்து, அறிக்கையை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பட்டதாரி / முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு... ராணுவப் பப்ளிக் பள்ளிகளில் வேலை!

இந்திய ராணுவப் பப்ளிக் பள்ளிகள் என்பது ராணுவ அதிகாரிகளின் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக 1983-ல் தொடங்கப்பட்ட ஒரு பொதுக் கல்வி நிறுவன அமைப்பு ஆகும். தற்போது, நாடு முழுவதும் தற்போது 137 ராணுவ பொதுப் பள்ள... மேலும் பார்க்க

Job Updates: Degree படித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் காத்திருக்கிறது வேலை வாய்ப்பு!

இந்தியா போஸ்ட் பேமேன்ட்ஸ் வங்கியில் காத்திருக்கிறது பணி. என்ன வேலை? நிர்வாக எக்ஸிகியூட்டிவ்.மொத்த காலி பணியிடங்கள்: 344 (தமிழ்நாட்டில் 13)வயது வரம்பு: 20 - 35சம்பளம்: ரூ.30,000பணி ஆண்டுக்காலம்: 1 ஆண்ட... மேலும் பார்க்க

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜூனியர் அசிஸ்டண்ட் பணிகள்... Degree முடித்தவர்கள் கவனத்திற்கு..!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் Assistant Section Officer பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அமைச்சகத் துறை அல்லது தமிழ்நாடு நீதி அமைச்சகத் துறையில் ஜூனியர் அசிஸ்டண்ட் அல்லது அசிஸ்டண்ட்... மேலும் பார்க்க

Job Updates: NTPC; விவசாயம் படித்திருப்பவர்களுக்கு தேசிய அனல் நிலையத்தில் வேலை!

இளங்கலை விவசாயம் படித்தவர்களுக்கு தேசிய அனல் மின் நிலையத்தில் காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன வேலை?பயோமாஸில் ஜூனியர் நிர்வாகி பணி. இந்த பணியில் கழிவுகள் மற்றும் பயோமாஸ்களை நிர்வாகிப்பத... மேலும் பார்க்க

Job Fair: தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்; 20,000 காலி பணியிடங்கள்; யார், யார் பங்கேற்கலாம்?

வரும் சனிக்கிழமை (அக்டோபர் 19) பெரம்பலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.என்ன...எங்கே? பெரம்பலூர் துறையூர் ரோட்டில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்ப... மேலும் பார்க்க