செய்திகள் :

Pannun Murder Plot: காலிஸ்தான் தலைவரை கொல்ல ஸ்கெட்ச்; Ex-RAW Agent மீதான FBI புகாரும் பின்னணியும்

post image

அமெரிக்க குடியுரிமையை பெற்ற இந்திய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன்னை கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக விகாஸ் யாதவ் என்ற இந்திய முன்னாள் உளவுத் துறை அதிகாரி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ (FBI) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் (RAW) ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவில் முன்னாள் அதிகாரியாக இருந்த விகாஸ் யாதவ் தற்போது கொலை முயற்சி மற்றும் பணமோசடி உட்பட பல்வேறு கடுமையான வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் பன்னுன்னை கொல்வதற்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு விகாஸ் யாதவ் சதித் திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகை கூறுகிறது. தற்போது விகாஸ் யாதவ் தலைமறைவாகி இருக்கிறார்.

முன்னாள் RAW அதிகாரி; FBI -ஆல் தேடப்படும் குற்றவாளி

சீனாவை பொது எதிரியாக கருதும் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான நட்புறவில் இந்த வழக்கு ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது. காரணம், இதே போன்ற ஒரு விவகாரத்தில்தான் தற்போது கனடா - இந்தியா இடையில் சிக்கல் எழுந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்ற நபரின் மூலம் நியூயார்க்கில் வைத்து பன்னுன்னை தீர்த்துக் கட்ட விகாஸ் குப்தா திட்டம் தீட்டினார் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இந்த நிகில் குப்தா என்ற நபர் கடந்த ஜூன் மாதம் செக் குடியரசால் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். தற்போது நிகில் குப்தா அமெரிக்காவின் பிடியில் இருக்கிறார்.

விகாஸ் யாதவ் இந்தியாவின் மிகப் பெரிய துணை ராணுவப் படையான மத்திய ரிசர்வ் படைக்கு உதவி கமாண்டராக பணியாற்றியவர் என்று குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது. பன்னுனுடைய நியூயார்க் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அவருடைய அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நிகில் குப்தாவிடம் விகாஸ் வழங்கியிருக்கிறார். 

அமெரிக்காவின் இந்த மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கு இந்தியாவும் உடனடியாக பதிலளித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீப் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விகாஸ் யாதவ் தற்போது இந்திய அரசாங்க அதிகாரியாக இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன் மூலம் விகாஸ் யாதவ் இந்திய அரசாங்க அதிகாரியாக முன்னர் பணியாற்றியது உறுதியாகியுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரம் வெளிவரத் தொடங்கிய நாள்களில், பன்னுன்னை கொலை செய்ய முயன்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பொறுப்புகளிலும் இல்லை என்று இந்தியா கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. 

இந்தியா - அமெரிக்கா

இதற்கு முன்பு அமெரிக்கா தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் விகாஸ் யாதவ் பெயரை வெளியிடவில்லை. அதில் கொலைக்கான சதித் திட்டம் தீட்டியவரின் பெயரை ‘சிசி 1’ என்றே குறிப்பிட்டிருந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய குற்றப்பத்திரிகையில் தான் ‘சிசி 1’ என்பது விகாஸ் யாதவ் என்று மாற்றப்பட்டிருக்கிறது. 

இந்தக் கொலைத் திட்டத்துக்காக இந்தியாவில் இருந்து நிகில் குப்தாவை கடந்த ஆண்டு மே மாதம் விகாஸ் யாதவ் வேலைக்கு எடுத்திருக்கிறார். தன்னை ‘அமானத்’ என்ற பெயருடன் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார் விகாஸ். பல்வேறு தொலைபேசி அழைப்புகள், மின்னணு தொலைதொடர்பு மூலம் நடந்த உரையாடல்களில், இந்த வேலையை செய்து முடித்தால் குப்தா மீது இந்தியாவில் இருக்கும் கிரிமினல் வழக்குகளை ரத்து செய்ய உதவுவதாக விகாஸ் உறுதியளித்துள்ளார். ஒருமுறை டெல்லியில் குப்தாவை நேரில் சந்திக்கவும் செய்துள்ளார் நிகில் யாதவ். 

இந்தச் சந்திப்புக்கு பிறகு 2023 மே மாதம் 12-ம் தேதி குப்தாவை தொடர்புகொண்ட யாதவ், குப்தா மீதான கிரிமினல் வழக்கு ‘சரிகட்டபட்டுவிட்டதாக’ தெரிவித்துள்ளார். இனி உங்களுக்கு போலீஸிடமிருந்து அழைப்புகள் வராது என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

விகாஸின் அறிவுறுத்தலின்படி நிகில் குப்தா பன்னுனை கொலை செய்ய இன்னொரு ஹிட்மேனை அணுகியிருக்கிறார். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால், குப்தா தொடர்புகொண்ட அந்த ஹிட்மேன், அண்டர்கவர் ஆபரேஷனில் இருந்த அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்பு அமலாக்கத் துறை அதிகாரி. அந்த ஹிட்மேன் / அண்டர்கவர் அதிகாரிக்கு குப்தா $100,000 தருவதாக பேசி, அதன் முன்தொகையாக $15,000 பணமாக கொடுத்திருக்கிறார். 

ஜஸ்டின் ட்ரூடோ, மோடி இந்தியா Vs கனடா

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு சீக்கிய கோவிலுக்கு வெளியே முகமூடி அணிந்த ஒரு நபர் சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை சுட்டுக் கொன்றார். இந்த நிஜ்ஜார், பன்னுன்னின் கூட்டாளி என்று அமெரிக்காவின் குற்றப்பத்திரிகை கூறுகிறது. ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிஜ்ஜாரின் புகைப்படத்தை விகாஸ் யாதவ், நிகில் குப்தாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அண்டர்கவர் அதிகாரியிடம் குப்தா, ‘நிஜ்ஜாரும் எங்கள் இலக்குகளில் ஒருவராக இருந்தவர்’ என்று கூறியிருக்கிறார். குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இன்னொரு தகவல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வருகை தரும் ஜூன் 20-ஆம் தேதியோ அல்லது அதற்கு அடுத்தடுத்த நாட்களிலோ பன்னுன் கொலை நடக்கக் கூடாது என்று விகாஸ் யாதவ், குப்தாவிடம் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து ஜூன் 30-ஆம் தேதி செக் குடியரசு அதிகாரிகளால் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார்.  

18 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் இந்திய ராணுவ உடையில் நிகில் யாதவ் இருப்பது, நியூயார்க்கில் நடந்த பணிப் பரிமாற்றங்கள் என பல்வேறு புகைப்படங்களையும் அமெரிக்கா இணைத்திருக்கிறது. 

இந்த குற்றப்பத்திரிகை குறித்து கருத்து தெரிவித்துள்ள குர்பத்வந்த் சிங் பன்னுன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அமெரிக்க குடிமகனின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படை அரசியலமைப்பு கடமைக்கான தனது உறுதிப்பாட்டை அமெரிக்க அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

குர்பத்வந்த் சிங் பன்னுன்

விகாஸ் யாதவ் ஒரு இடைநிலை சிப்பாய் தான் என்றும், காலிஸ்தான் அமைப்புகளின் நோக்கத்தை நசுக்கும் மோடியின் கொள்கையின் ஒரு பகுதியாக தன்னை கொல்வதற்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ரா தலைவர் சமந்த் கோயல் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரிலேயே விகாஸ் செயல்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நிஜ்ஜார் கொலையை சுற்றி இந்தியா - கனடா இடையே நிலவிக் கொண்டிருக்கும் மோதல் போக்கின் இடையே தற்போது அமெரிக்கா தாக்கல் செய்திருக்கும் இந்த குற்றப்பத்திரிகை உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்; திராவிடம் என்பது இனம் அல்ல இடம்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை!

வேலூரில், பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ``பகுத்தறிவு பற்றிப் பேசுகிற இந்த திராவிட கூட்டத்திற்கு நாகரிகம் தெரியவில்லை. ஒரு ... மேலும் பார்க்க

Udhayanidhi : `அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்!' - தமிழிசைக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

"ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" என்று தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ... மேலும் பார்க்க

`சிதம்பரம் தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா? ஆணவம் நல்லதல்ல...’ - காட்டமான உயர் நீதிமன்றம்!

சிதம்பரம்: `தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதல்ல!’ - நீதிமன்றம் கடுகடுத்த பின்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஜெயசீலா என்ற பெண் பக்தை ஒருவரை கனகசபை மீது அழைத்துச் சென்றதற்காக, தர்ஷன் (எ) நடர... மேலும் பார்க்க

வாரிசுக்காக கொடுத்து வாங்கும் சகோதரர்கள்: உத்தவைத் தொடர்ந்து மகனை தேர்தலில் இறக்கும் ராஜ் தாக்கரே!

மகாராஷ்டிராவில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே உயிரோடு இருந்தவரை அவரது குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தல் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. முதன் முதலில் உத்தவ் தாக்கரே ... மேலும் பார்க்க