செய்திகள் :

Ranji Trophy: பிரித்திவி ஷா மீது ஒழுங்கு நடவடிக்கை? மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட பின்னணி என்ன?

post image
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் ரஞ்சிக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடருக்கான மும்பை அணியிலிருந்து பிரித்திவி ஷா இப்போது நீக்கப்பட்டிருக்கிறார். முறையாக பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொள்ளாமல் இருந்ததால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

'சஞ்சய் பாட்டீல், ரவி தாக்கர், ஜீதேந்திர தாக்கரே, கிரண் பவார், விக்ராந்த் ஆகியோரை உள்ளடக்கிய தேர்வுக்குழு வருகிற 26 ஆம் தேதி முதல் திரிபுராவுக்கு எதிராக நடைபெறப்போகும் போட்டிக்கான மும்பை அணியை தேர்வு செய்திருக்கிறார்கள்.' என்றுதான் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கூறப்பட்டிருக்கிறதே தவிர பிரித்திவி ஷா நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை.

ஆனாலும், மற்ற வீரர்கள் அணி நிர்வாகத்தின் அறிவுரைகளுக்கு கட்டுப்பட்டு முறையாக வலைப்பயிற்சிகளில் ஈடுபடும்போது பிரித்திவி ஷா மட்டும் பயிற்சி செஷன்களை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால்தான் அணியின் கேப்டனான ரஹானேவே பிரித்திவி ஷாவை அணியில் எடுக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில், 'எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. நன்றி!' என பிரித்திவி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிரித்திவி ஷா சர்காஸ்டிக்காக பதிலடி கொடுத்திருக்கிறார் என இணையவாசிகள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

பிரித்திவி ஷா திறமையான இளம் வீரர். தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலே சதமடித்தவர். டெக்னிக்கலாக வலுவான வீரர். கவாஸ்கர், சச்சின், சேவாக் மூவரும் கலந்த கலவை என ஏகத்துக்கும் பாராட்டப்பட்டவர். ஆனால், நன்றாக தொடங்கிய தன்னுடைய கரியரை தன்னுடைய நடவடிக்கைகளாலேயே அவர் கெடுத்துக் கொண்டார். நண்பர்களுடன் வெளியே சுற்றுகையில் பொது மக்களுடன் சண்டையிட்டு போலீஸிடம் சிக்கியது, தெரிந்தோ தெரியாமாலோ ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது, சக வீரர்களுடனும் பயிற்சியாளர்களுடனும் சுமூகமான உறவை பேணாதது என அடுத்தடுத்து பல சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்போது அவருடைய சொந்த அணியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார்.

Prithvi Shaw

பிரித்திவி ஷாவின் பேட்டிங் அத்தனை அற்புதமாக இருக்கும். அதி திறமைசாலியான ஒரு வீரர் இப்படி சர்ச்சைகளில் சிக்கி தேய்ந்து போவது பெரும் வருத்தம்தான்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

``கால் கிடைச்சதும் மறுபடி விளையாட ஆரம்பிச்சிடுவேன்..'' - தன்னம்பிக்கைப் பெண் சுபஜா

சுபஜா, பலருக்கும் அறிமுகமான பெயர்தான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் 'மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து' விளையாட்டில் தேசிய அளவில் தேர்வானபோது விகடனிடம் பேசியிருந்தார். பெரும் போராட்டங்களின... மேலும் பார்க்க

Commonwealth Games: நீக்கப்பட்ட பிரபல விளையாட்டுகள்... பதக்க வாய்ப்புகளை இழக்கும் இந்தியா?

காமென்வெல்த் 2026 தொடரிலிருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவே அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழ... மேலும் பார்க்க

Ajith: ``ரேஸிங்தான் என்னை நிறைவாக உணரச் செய்கிறது!'' -அஜித்தின் நெகிழ்ச்சியும் வெளியான அப்டேட்டும்!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்துகொள்ளப் போகிறார் எனும் தகவல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திராவும் அதை உறுதி செய்தார். இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Ind Vs Nz: 'திடீரென ஆட்டத்தை நிறுத்திய நடுவர்; அப்செட் ஆன ரோஹித்; என்ன நடந்தது?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்திருக்கும் நிலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை வி... மேலும் பார்க்க

Sarfaraz Khan: 'வாய்ப்புங்றது தேவதை மாதிரி..!' - பெங்களூருவில் சாதித்த சர்ப்ராஸூம் பின்னணியும்!

`வாய்ப்புங்றது தேவதை மாதிரி, அது கிடைக்கிறப்ப மதிச்சு ஏத்துக்கனும். இல்லைன்னா எப்பவுமே அது திரும்ப கிடைக்காது.’ சர்ப்ராஸ் கானின் கரியரை இந்த வரிகளுக்குள் அடக்கிவிடலாம். அவருக்கான வாய்ப்புகள் அவருக்கு ... மேலும் பார்க்க

Ind Vs Nz : 'இந்தியாவை எதிர்கொள்ள ரச்சினுக்கு உதவிய சிஎஸ்கே' - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ர... மேலும் பார்க்க