`நீக்கப்பட்ட செங்கோட்டையன்' - எடப்பாடி வீட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசன...
SBI கிரெடிட் கார்டுகளில் 'இந்தந்த' பேமென்டுகளுக்கு இனி தனிக் கட்டணம்; நாளை முதல் அமல்!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தங்களது கிரெடிட் கார்டு கட்டணங்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
கல்விக் கட்டணங்கள்...
அதன் படி, மூன்றாம் தரப்பு ஆப்கள் அல்லது வலைதளங்களில் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கல்வி சம்பந்தமான எந்தவொரு கட்டணங்களை செய்தாலும், அதற்கு இனி ஒரு சதவிகித பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒருவேளை, இதே கட்டணத்தை கல்வி நிலையங்களின் நேரடி வலைதளத்திலேயோ, கல்வி நிலையங்களில் பாயின்ட் ஆஃப் சேலிலேயோ நேரடியாக செலுத்தினால், இந்த ஒரு சதவிகித பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது.

வாலட் லோடு
அடுத்ததாக, வாலட் லோட் (Wallet load). வாலட் லோட் என்றால் ரயில்வே ஆப் போன்றவைகளில் இருக்கும் வாலட்களுக்கு கிரெடிட் கார்டுகளில் இருந்து பணம் பரிமாற்றம் செய்வது ஆகும்.
இனி இந்த வாலட் லோடுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளில் இருந்து ரூ.1,000-க்கும் மேல், வாலட் லோடு செய்யப்பட்டால், அதற்காக ஒரு சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும். ஒவ்வொரு முறை 1,000-க்கு மேல் பரிமாற்றம் நிகழும்போது, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்தக் கட்டணங்களில் மாற்றம் நவம்பர் 1 (நாளை) முதல் அமலுக்கு வர உள்ளது.
















