செய்திகள் :

TVK Vijay: `அரசியலில், அவர் விருப்பம்தான் எங்களின் விருப்பமும்’ - மாநாட்டுக்கு வந்த பெங்களூரு ரசிகை

post image

விஜய்யின் அரசியல் முதல் மாநாடு விக்கிரவாண்டி அருகே இருக்கும் வி.சாலையில் நாளை நடைபெறவிருக்கிறது. மாநாட்டுக்கான பிரமாண்ட மாநாடு, இருக்கைகள், பிரமாண்ட கட்அவுட் என தீவிரமான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. நாளை நடக்கப்போகும் மாநாட்டுக்காக இன்றுமுதலே தொடர்ந்து ரசிகர்களும் தொண்டர்களும் வந்துகொண்டிருக்கின்றனர். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான காவல்துறையும் குவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு வந்த பெங்களூரு ஐ.டி கம்பெனியில் HR -ஆக பணிபுரியும் மோகனப்பிரியா என்பவரிடம் பேசினோம்.

அவர், ``சிறுவயதிலிருந்தே நான் தளபதியின் ரசிகை. ஏழு ஆண்டுகளாக அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன். தளபதியின் அரசியல் பேச்சு எப்படி இருக்கும் என நேரில் பார்க்க பெங்களூரிலிருந்து வந்திருக்கிறேன். சின்னவயசுலிருந்தே நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவர் அரசியல் வருகையில், அவருடைய விருப்பம் தான் எங்களின் விருப்பம். அவர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம். அவருடைய அரசியல் பயணம் சிறப்பாக இருக்கும். அரசியலில் இனி நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். கர்நாடகாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டுக்காக வந்திருக்கிறோம்." எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Tvk Vijay : `மது அருந்தினால் நோ என்ட்ரி, மெக்கானிக் குழு, நெரிசல் தவிர்க்க திட்டம்'- மாநாடு ஹைலைட்ஸ்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் அரசியல் மாநாடு நாளை நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விக்கிரவாண்டியில் மாநாடு நடைபெறவிருக்கும் திடலுக்கு சென்றோம... மேலும் பார்க்க

TVK Vijay: மாநாடு வரை ஒவ்வொரு கி.மீ-க்கும் ஒரு மரம்... பசுமை மாநாடா - சென்னை டு வி.சாலை Live Report!

நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். மேலும் பார்க்க

TVK Vijay: நடிகர் விஜய்யின் அரசியல் மாநாடு; - S.A.C பூர்வீக ஊர் மக்கள் ஷேரிங்ஸ்

அரசியல் களத்துக்குள் விஜய் வரப்போகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டபோதே பல்வேறு விவாதங்கள் தொடங்கியது. தொடர்ந்து, அரசியல் தொடர்பான படங்களில் நடித்தும், அவ்வப்போது சினிமா மேடைகளில் அரசியல் பேசியும் தன்னுடை... மேலும் பார்க்க

TVK: 'பிஸ்கட், ஸ்நாக்ஸ், தண்ணீர் பாட்டில்..' - மாநாட்டிற்குத் தயாராகும் 8.5 லட்சம் சிற்றுண்டி கிட்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடக்கும் இந்த பிரமாண்டமான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பணிகள... மேலும் பார்க்க