செய்திகள் :

TVK: "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...!" - விஜய் படங்களில் எம்ஜிஆர் சென்டிமென்ட்கள்!

post image

'நீங்க நல்லா இருக்கோணும்... நாடு முன்னேற...' என்ற பாட்டு பி.ஜி.எம்மில் ஓட... படம் தொடங்குகிறது.

'இதோட நம்ம தலைவரோட (எம்.ஜி.ஆர்) படம் 200 தடவைக்கு மேல நம்ம தியேட்டர்ல போட்டாச்சு. ஆனா, ஒவ்வொரு தடவையும் சூடம் காட்டிதான் ஆரம்பிக்கணும்னா எப்படிப்பா' என்று ஒருவர் கேட்க, '200 தடவையா இருந்தா என்ன? நம்ம தலைவர் படத்தை 2,000 தடவை போட்டாலும் நம்ம தளபதி வந்து கற்பூரம் ஏத்தாம பெட்டிய கொடுக்க மாட்டோம்' என்று இன்னொருவர் கூறுகிறார்.

இப்போது ஹீரோ என்ட்ரி!

இப்போது ஹீரோ என்ட்ரி!

ஹீரோ என்ட்ரிக்கு பிறகு, எம்.ஜி.ஆரே நேரில் வந்து, "நீங்க என் ரசிகனா இருக்கிறது எனக்கு உண்மையாவே ரொம்ப பெருமையா இருக்கு. உன்னால முடிஞ்சு வரைக்கும் ஏழைகளுக்கு உதவி செய். இப்படிப்பட்ட ஏழைங்க சிரிப்புல தான் நாம இறைவனையே காண முடியும்" என்று ஹீரோவிடம் கூறுகிறார்.

இதோடு ஹீரோவின் கனவு கலைகிறது.

இங்கே 'ஹீரோ' என்று குறிப்பிடப்பட்டிருப்பவர் யார் என்பதை 'விஜய்' என்று கண்டுபிடித்திருப்பீர்கள். இது விஜய் நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான 'வசீகரா' பட சீன்.

பைரவா

அப்படியே டைம் டிராவல் செய்து... 2017-ம் ஆண்டிற்கு வருவோம். இப்போது 'பைரவா' ரிலீஸ்.

அநியாயத்தைத் தட்டி கேட்ட ஹீரோயின் வீட்டில் கரண்ட், தண்ணீர் கட் செய்யப்படுகிறது. ஹீரோ வில்லன் ஆட்களைத் துவம்சம் செய்ய... ஹீரோயின் வீட்டிற்கு கரண்டும், தண்ணீரும் வருகிறது. கரண்டு வந்து ஆன் ஆகும் டிவி, 'நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு; பகை வந்த போது துணை ஒன்று உண்டு' என்ற எம்.ஜி.ஆரின் 'சந்திரோதயம்' படப் பாட்டு ஓடுகிறது.

அதே ஆண்டு, அக்டோபரில் மெர்சல் ரிலீஸ்...

அதே ஆண்டு, அக்டோபரில் மெர்சல் ரிலீஸ்.

தொழிற்சாலை கட்ட கோயில் நிலத்தை அளக்க, தியேட்டரில் எதிரிகளை அடிக்கிறார் விஜய். தியேட்டர் என்ட்ரியில் 'உழைக்கும் கரங்கள்' எம்.ஜி.ஆர் நடக்க... இவர் நடக்க என்ற மெர்சலின் மாஸ் பி.ஜி.எம் ஒலிக்கிறது.

'பிகில்' ராயப்பன்

மீண்டும் டைம் டிராவல்...2019-ம் ஆண்டு பிகில் ரிலீஸ்.

ராயப்பன் கேரக்டர் இன்ட்ரோவில் 'என்னதான் நடக்கும் நடக்கட்டுமே' என்று பாடல் ராயப்பன் காரில் ஓடுகிறது. அந்த காரில் எம்.ஜி.ஆர் போட்டோவும் வைக்கப்பட்டிருக்கிறது. பின்பு என்ன... பி.ஜி.எம்முடன் ராயப்பனும் பாட ஒரு ஃபைட் சீன்.

2019-ம் ஆண்டு பிகில் ரிலீஸ்.

விஜய்யின் இந்தப் படங்கள் மட்டுமல்ல... இன்னும் சில படங்களில் கூட எம்.ஜி.ஆர் ரெபரென்ஸ் இருக்கிறது. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஒரு சில நடிகர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதில் எம்.ஜி.ஆர் மிக மிக முக்கியமானவர். நடிகர் டு அரசியல் வரிசையில் லேட்டஸ்டாக விஜய் இணைந்திருக்கிறார். இவர் அரசியலில் வெற்றி பெறுவாரா... இல்லையா என்று காலம் நமக்குச் சொல்வதற்கு முன்பு, விஜய் எப்படி தனது படங்களில் எம்.ஜி.ஆரை முன்னெடுத்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

பெரும்பாலான விஜய் கதாபாத்திரங்கள் மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதாகவும், மக்களில் ஒருவராகவும் இருப்பதாகவும், அடித்தட்டு மக்களுக்கு உதவுவதாகவும்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதை உற்றுக் கவனித்தால், எம்.ஜி.ஆர்., படங்களின் அதே ஃபார்முலாதான். எம்.ஜி.ஆர்., ஓப்பனிங் பாடல்களுக்கு எப்படி முக்கியத்துவம் தருவாரோ, அதே அளவு முக்கியத்துவத்தைத்தான் விஜய்யும் தனது பாடல்களுக்குத் தருவார்.

மேலும் நிகழ்ச்சிகள், ஆடியோ லான்ச்களில் கூட 'எம்.ஜி.ஆர்' பற்றி நிறையப் பேசி இருக்கிறார் விஜய். இதற்கு, லியோ, பிகில் ஆடியோ லான்ச்கள் நல்ல உதாரணங்கள்.

பைரவா படத்தில் 'விஜய்'!

எம்.ஜி.ஆரின் அரசியல் வெற்றிக்கு அவரது படங்களும், பேச்சுகளும் மிகப்பெரிய காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த வெற்றியை எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய ரசிகரான விஜய் பெறுவாரா? என்பதுதான் கேள்விக்குறி.

விக்கிரவாண்டியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக திருச்சியைத்தான் மனதில் வைத்திருந்தார் விஜய். இந்த 'திருச்சி சென்டிமென்டிற்கு' காரணம், எம்.ஜி.ஆர் தனது முதல் மாநாட்டை நடத்தியது திருச்சியில்தான்.

படத்திலும் சரி... அரசியலிலும் சரி... எம்.ஜி.ஆர் ரெபரென்ஸ் தேடும் விஜய், எம்.ஜி.ஆர் போல அரசியலில் ஜெயிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

உத்தவ், காங்கிரஸ் பிடிவாதம் ; வேட்பாளர்களை பாஜக-விடம் கடன் வாங்கும் அஜித் பவார் - மகா., கலாட்டா!

பிடிவாதம் காட்டும் கட்சிகள்!மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் க... மேலும் பார்க்க

TVK : `விஜய் சார் தொடர்ந்து இந்த ஆயுதத்தை எடுக்கணும்..!' - பேரரசு பளீச்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரமாண்டமாக ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கிறது.சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் விஜய் கட்சி தொடங்கியது முதல் பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள். அ... மேலும் பார்க்க

TVK: "இவற்றையெல்லாம் செய்யாதீர்கள்..." - மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) நடைபெறவிருக்கிறது. பிரமாண்ட மாநாடு மேடை, 101 அடி நீளக் கொடிக் கம்பம், நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஏற்பாடு, அரசியல், சினிமா பிரபலங்களின் வாழ்த்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்: மும்முனை போட்டியை எதிர்கொள்ளும் தாக்கரே வாரிசுகள்; பின்னணி என்ன?

மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே குடும்பத்திலிருந்து முதல் முறையாகத் தேர்தல் அரசியலில் குதித்தவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே. இவர் கடந்த தேர்தலில் மும்பையில் உள்ள ஒர்லி தொகுதியில் போட்டியிட... மேலும் பார்க்க

TVK : "நான் முதலமைச்சரானால் நடிக்கமாட்டேன்..." - பட விழாக்களும் விஜய் பற்ற வைத்த அரசியல் வெடிகளும்

நாளை (அக்டோபர் 27) வி.சாலையில் நடக்கும் மாநாட்டில் விஜய் ஏறப்போகும் மேடைதான் அவரின் முதல் அரசியல் மேடை. ஆனால், அரசியல் என்ட்ரிக்கு முன்பே அவரின் திரைப்பட நிகழ்ச்சிகளின் மேடைகளைக் கிட்டத்தட்ட அரசியல் ம... மேலும் பார்க்க