செய்திகள் :

TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்

post image
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது.

தமிழக முழுவதுமிருந்து தொண்டர்கள் வி.சாலையை நோக்கிப் புறப்பட ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகரான சௌந்தர ராஜன் தன்னுடைய 'மண்ணுக்கும் மக்களுக்கும்' அமைப்பினருடன் சென்னையிலிருந்து சைக்கிளிலேயே வி.சாலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார். மீனம்பாக்கம் அருகே அவர்கள் சென்ற போது சௌந்தர ராஜனை சந்தித்துப் பேசினோம், 'எங்களோட அமைப்பு மூலமா சென்னைல இருந்து ஒரு 35 பேர் சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்.

சௌந்தர ராஜன்

மாநாடு பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்தும் விதமா இப்படி பண்றோம். சென்னைல இருந்து வி.சாலை 160 கி.மீ வருது. இதை குறிக்கிற வகையில 160 மரக்கன்றுகளை போற வழியில இருக்க ஊர்ல எல்லாம் நடப்போறோம். பிகில் ஆடியோ விழாவுல கூட அண்ணன் என்னையப் பத்தி பேசியிருப்பாரு. கட்சி தொடங்குன பிறகும் விஜய் அண்ணனை ஒரு ரெண்டு முறை சந்திச்சுட்டு வந்தேன். அவர் மேல பெரிய நம்பிக்கை இருக்கு. கண்டிப்பா விஜய் அண்ணன் சமத்துவத்தைப் பேசக்கூடிய தலைவரா இருப்பாரு. இயற்கை வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தலைவரா இருப்பாரு. தமிழ்நாடு முழுக்க இருந்து எங்க அமைப்ப சேர்ந்த 250 பேர் எங்களை மாதிரியே மரம் நட்டுக்கிட்டே மாநாடு நோக்கி வர்றாங்க. எங்களோட ஆதரவு என்னைக்கும் அண்ணனுக்கு இருக்கும்.' என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK: "நாளை போடப்படும் அடித்தளம் நீடித்த மரபுக்கு வழிவகுக்கும்..!" - இயக்குநர் மோகன் ராஜா வாழ்த்து

`வேலாயுதம்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 13 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. விஜய்யுடன் ஜெனிலியா, ஹன்சிகா ஆகியோர் இப... மேலும் பார்க்க

TVK: `தீப்பந்தம் எடுத்துத் தீண்டாமை கொளுத்து' - கபிலனின் வரிகளில் உருவமெடுத்த விஜய்யின் அரசியல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான ஏற்பாடு பணிகள் தீவிரமடைந்திருக்கின்றன. நாளை கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது.கடந்த பிப்ரவரி மாதம் கட்சி குறித்தான அறிவிப்பை வெளியிட்டு நடிகர் விஜய் , ... மேலும் பார்க்க

Good Bad Ugly: மாஸ்டர் படத்திற்குப் பிறகு அஜித் சார் சொன்னார் - `குட் பேட் அக்லி'-யில் அர்ஜுன் தாஸ்

அஜித் நடிக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: `LCU உருவானது பற்றி 10 நிமிட குறும்படம் - லோகேஷ் கொடுத்த அப்டேட்!

லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.இன்று அவருக்கு மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ள `எல்.சி.யு' என்பதற்கு தொடக்கப்புள்ளி `கைதி' திரைப்படம்தான். அத்திரைப்ப... மேலும் பார்க்க

"நான் ரகசிய கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு உண்மையான காரணம் இதுதான்" - நடிகை தேவயானியின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகி... மேலும் பார்க்க