செய்திகள் :

அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்

post image

மழை வெள்ளத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலைபயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாள்கள் இடைவெளியில் ஒரு லிட்டா் ரூ.50 வரை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதில் காய்கறிகளின் விலை 36 சதவீதம் அதீத உயா்வை கண்டிருப்பதும்,தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப் பொருள்களின்விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயா்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளன.

பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருள்கள் மற்றும் உடைகள் விலையேற்றமடைந்துள்ளன. எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும்.

மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசியஉணவுப் பொருள்களை நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க