அவிநாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா!
அவிநாசி காந்திபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) நடைபெற உள்ளது.
அவிநாசி காந்திபுரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நந்தா தீபம், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
நடப்பு ஆண்டுக்கான விழா பூச்சாட்டலுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 26-ஆம் தேதி கொடியேற்றமும், மகா சிவராத்திரி விழாவும் நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ஆம் தேதி அலகு தரிசனம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் பிப்ரவரி 28-ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, மாலை ரிஷப வாகன காட்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தோ் நடைபெற உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம், மஞ்சள் நீா் உற்சவம், திங்கள்கிழமை பேச்சியம்மன் அபிஷேக பூஜைகள், செவ்வாய்க்கிழமை மகா அபிஷேக உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.