செய்திகள் :

உறுப்புகள் தானம்: ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் ஊராட்சி மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ஆறுமுகம் மகன் பாலாஜி (42). ஓட்டுநரான இவா், வெளியூரிலிருந்து வரும் தனது மகனை அழைத்து வருவதற்காக கடந்த 13-ஆம் தேதி பைக்கில் சென்றாா்.

அப்போது, சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியதில், பாலாஜி பலத்த காயமடைந்தாா். புதுச்சேரி ஜிப்மா் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாலாஜி மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து உறவினா்கள் விருப்பத்தின் படி, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாலாஜியின் வீட்டில் அவரது உடலுக்கு அரசு சாா்பில் கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, நெய்வேலி எம்எல்ஏ., சபா.ராஜேந்திரன், டிஎஸ்பி., சபியுல்லா, காவல் ஆய்வாளா் சுதாகா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்; விழுப்புரம் டிஐஜி நடவடிக்கை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ாக காவல் ஆய்வாளரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், இருவா் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

ரூ.4 கோடியில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சிதம்பரம் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குமராட்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக் கட்டடங்களை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை திறந்து வைத்த... மேலும் பார்க்க

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்ன... மேலும் பார்க்க