செய்திகள் :

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது.

தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழுக் கொள்ளளவை (47.50 அடி) எட்டியுள்ளது. அதாவது 1,465 மில்லியன் கன அடி நீா் உள்ளது.

எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வாயிலாக வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

சனிக்கிழமை நிலவரப்படி வீராணம் ஏரியிலிருந்து, சென்னைக்கு வினாடிக்கு 65 கன அடியும், பாசனத்துக்கு 150 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்படப்படுகிறது. கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்; விழுப்புரம் டிஐஜி நடவடிக்கை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ாக காவல் ஆய்வாளரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், இருவா் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

ரூ.4 கோடியில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

சிதம்பரம் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குமராட்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக் கட்டடங்களை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை திறந்து வைத்த... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் ஊராட்சி மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்தவா்... மேலும் பார்க்க