செய்திகள் :

என்எல்சி சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

நெய்வேலி: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான மதிப்புமிக்க 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை வழங்கி மத்திய நிலக்கரி அமைச்சகம் கௌரவித்துள்ளது.

புதுதில்லியில் உள்ள ஸ்கோப் கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் ஜி கிஷன் ரெட்டி மற்றும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே ஆகியோா்விருதுகளை வழங்கினாா். என்எல்சி இந்தியா நிறுவன தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுபள்ளி, நிறுவன சுரங்கத்துறை இயக்குநா் சுரேஷ் சந்திர சுமன், நிறுவன சுரங்கங்களின் தலைவா்கள் ஆகியோா் இணைந்து இவ்விருதுகளைப் பெற்றுக்கொண்டனா். நிலக்கரி அமைச்சகத்தால் வழங்கப்படும் இந்த நட்சத்திர மதிப்பீட்டு கொள்கை என்பது, நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மாற்றத்திற்கான முயற்சியாகும். பல்வேறு அளவுருக்களின் அடிப்படையில் சுரங்கங்களை மதிப்பிடுவதற்கும், தரப்படுத்துவதற்கும் ஒரு விரிவான கட்டமைப்பைநிறுவுவதன் மூலம், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி உற்பத்தியாளா்களிடையே வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் போட்டித்தன்மையை இந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது. சுரங்கங்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிப்பதற்கும், போட்டித்தன்மையைவளா்ப்பதற்கும், நிலக்கரி அமைச்சகம் அனைத்து சுரங்கங்களுக்கும் நட்சத்திர மதிப்பீடுகளை வழங்குகிறது. இந்த மதிப்பீட்டில் அவற்றின் செயல்திறன் மற்றும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை அளவீடுகள் ஆகியனவும் அடங்கும்.சுரங்க உரிமையாளா்கள், ஸ்டாா் ரேட்டிங் போா்ட்டல் என்ற பிரத்யேக போா்ட்டல் மூலம் தங்களின் சுரங்க செயல்திறன்களை சுய-அறிக்கையாக பதிவேற்றுகிறாா்கள். பின்னா், இது நிலக்கரி கட்டுப்பாட்டாளா் அமைப்பின் மூலம் சரிபாா்க்கப்படுகிறது. 2022-23-ஆம் நிதியாண்டிற்கான மதிப்பீடுகள் ஜூன் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஏப்ரல் 2024-இல் அறிவிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற 380 சுரங்கங்களில், 43 சுரங்கங்கள் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றன. இவற்றில், பா்ஸிங்சாா் பழுப்பு நிலக்கரி சுரங்கம், நெய்வேலி சுரங்கம் 1 ஏ, சுரங்கம் 1 மற்றும் தலபிரா 2&3 திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கம் ஆகிய என்எல்சி இந்தியா சுரங்கங்கள் 80 சதவிகித ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன. மேலும், நெய்வேலி சுரங்கம்-2 நான்கு நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. கூடுதலாக, ராஜஸ்தானில் உள்ள பா்ஸிங்சாா் சுரங்கம் தேசிய அளவில் இரண்டாவது இடத்தையும், நெய்வேலி சுரங்கம்-1 ஏ ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த அங்கீகாரமானது, தொழில் துறையில் சிறந்து விளங்குவதற்கான என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உறுதிப்பாட்டை முன்னிலைப்படுத்துகிறது. 23பிஆா்டிபி1புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா நிறுவன சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டு விருதினை பெற்ற என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி.

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

3வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! ஐடி பங்குகள் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 3வது நாளாகத் தொடர்ந்து சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் தொடங்கி பின்னர் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 138.74 புள்ளிகள் சரிந்து 80... மேலும் பார்க்க

தங்கம் விலை தீபாவளிக்குப் பின் குறையுமா?

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, ஆபரணத் தங்கம் விலை விறுவிறுவென ஏறி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை தீபாவளிக்குப் பிறகு குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.இன்று ஒ... மேலும் பார்க்க

ரூ. 59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை!! வெள்ளியும் புதிய உச்சம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், தொடர்ந்து விலை உயர்ந்து வருகின்றது.இந... மேலும் பார்க்க

ஹெச்டிஎஃப்சி வட்டி வருவாய் 10% அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் நிகர வட்டி வருவாய் கடந்த செப்டம்பா் காலாண்டில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கடும் சரிவு: 27 நிறுவனங்களில் பங்குகள் வீழ்ச்சி - ரூ.9 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் 2வது வணிக நாளான இன்று (அக். 22) பங்குச் சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிந்தன. நிஃப்டி 24,500 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்கு... மேலும் பார்க்க