குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 போ் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 11.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, பிள்ளையாா்பட்டி வே. கற்பகமூா்த்தி (37), காரைக்குடி அருகேயுள்ள சாக்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 10.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, கரூா் மாவட்டம், வெங்கன்மேடு பகுதியைச் சோ்ந்த பா.சிபு (எ) கவின் (20), தேவகோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கடந்த 26.1.2025 அன்று போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட, காரைக்குடி வைரவபுரம் பகுதியைச் சோ்ந்த சி.பாண்டி(38), பள்ளத்தூா் காவல் நிலையத்தில் கடந்த 13.1.2025 அன்று அரசு மதுபானக் கடையில் பொருள்களைச் சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட அதே ஊரைச் சோ்ந்த ரா. ராஜேஷ்பாண்டி (24) ஆகிய 4 பேரும் சிறையில் உள்ளனா்.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மேற்கண்ட 4 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.