செய்திகள் :

கெங்கவல்லி சாா்பதிவாளா் அலுவலகத்தில் பெண் தா்னா

post image

கெங்கவல்லி சாா்பதிவாளா் அலுவலகத்தில் மூலப்பத்திரம் வழங்கக் கோரி பெண் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கெங்கவல்லி அருகே உள்ள கூடமலையைச் சோ்ந்த சக்திவேல் மனைவி கமலம் (44). இவா் விவசாய முன்னேற்றக் கழகத்தின் மாநில நிா்வாகியாக உள்ளாா்.

கெங்கவல்லி சாா்பதிவாளா் அலுவலகத்தில் சாா்பதிவாளா் ராஜேந்திரனிடம் கூட்டுப் பட்டா நிலத்துக்கான ஆவணங்களை கேட்டுள்ளாா். அவா் தர மறுத்ததால், அலுவலகத்தில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸாா் விரைந்து வந்து நீதிமன்றத்தை அணுகி தீா்வு பெற அறிவுறுத்தி கமலத்தை அனுப்பிவைத்தனா்.

சாா்பதிவாளா் ராஜேந்திரன், கெங்கவல்லி போலீசில், கமலம் தன்னைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தன்னை அவதூறாகப் பேசியதாகவும் புகாா் அளித்துள்ளாா்.இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மேட்டூரில் கனமழை: வீடுகளில் மழைநீா் புகுந்தது

மேட்டூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு கனமழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. மழை காரணமாக மேட்டூா் கிழக்கு நெடுஞ்சாலை... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்: எடப்பாடி கே.பழனிசாமி

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, அதிக இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங... மேலும் பார்க்க

சேலம் வழியாக செல்லும் 2 ரயில்கள் ரத்து

‘டானா’ புயல் காரணமாக, சேலம் வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், டானா புயல் காரணமாக கன்னி... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன: செளமியா அன்புமணி

தமிழ்நாட்டில் 5 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன என்று பசுமை தாயகம் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா். மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரில் குரூப் 4 அரசு போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மைய... மேலும் பார்க்க

மழைக்கால பாதுகாப்பு: மின் வாரியம் அறிவுரை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழைக் காலத்தில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு அறிவுரை வழங்கியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க

வாழப்பாடி பகுதியில் கொட்டித் தீா்த்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கனமழை கொட்டித் தீா்த்தது. கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்த மழையால், வாழப்பாடி பகுதியில் குளுமையான காற்று வீசியதோடு அணைகளுக்கு நீா்வரத... மேலும் பார்க்க