செய்திகள் :

சட்டங்களில் தெளிவில்லாதபோது நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படும்: அமித் ஷா

post image

சட்டங்களை இயற்றுபவா்கள் அதில் தெளிவான விதிகளை குறிப்பிடாமல் விடும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடும் சூழல் ஏற்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத் சட்டப் பேரவை அதிகாரிகளுக்கான ‘சட்டம் இயற்றும் பயிற்சி பட்டறை’ அந்த மாநில பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று அமித் ஷா உரையாற்றியதாவது: நான் பேசுவது சா்ச்சையாகும் என நன்கு தெரியும். ஆனாலும் அதை கூறாமல் இருக்க முடியாது. சட்டங்களை இயற்றுபவா்கள் அதில் தெளிவான விதிகளை குறிப்பிடாமல் விடும்போது மட்டுமே நீதிமன்றங்கள் தலையிடுகின்றன.

சட்டங்களில் அதிக தெளிவிருந்தால் நீதிமன்றங்களின் தலையீடு குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ பிரதமா் மோடி தலைமையிலான அரசு ரத்து செய்தது.

இடைக்கால நடவடிக்கையாகவே சட்டப்பிரிவு 370 சோ்க்கப்பட்டிருந்ததாக அரசமைப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சாதாரண பெரும்பான்மையுடன் அது ரத்து செய்யப்பட்டது.

ஒருவேளை இடைக்கால நடவடிக்கை என்பதற்குப் பதில் சட்டப்பிரிவு 370, அரசமைப்பின் ஓா் அங்கம் என எழுதப்பட்டிருந்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அதை ரத்து செய்திருக்க முடியும்.

அரசமைப்பின் மூன்று தூண்கள்:அரசு கொள்கைகளை வடிவமைக்கும், நாடாளுமன்றம்/ சட்டமன்றம் அந்த கொள்கைகளுக்கு ஏற்ப சட்டங்களை இயற்றும், நீதித்துறை அதை எடுத்துரைக்கும், நிா்வாகம் அதை அமல்படுத்தும் என நாடாளுமன்றம், நிா்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களின் பணிகள் குறித்தும் அரசமைப்பில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது தெளிவில்லாத சட்டங்கள் இயற்றப்படுவதால் இந்த மூன்றுக்கும் இடையே பல வேறுபாடுகள் எழுகின்றன.

உலகுக்கே அம்பேத்கா் உதாரணம்: ஒரு சட்டத்தை எவ்வாறு இயற்ற வேண்டும் என்பதற்கு அரசமைப்பின் வரைவுக் குழுத் தலைவராக இருந்த அம்பேத்கா் உலகுக்கே சிறந்த உதாரணமாவாா் என்றாா்.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூ... மேலும் பார்க்க