கும்பகோணம்: செல்லாத ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம்; நவராத்திரி விழாவில்...
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகளின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
சுக்மா மாவட்டத்தில், கொய்மெண்டா கிராமத்தின் அருகிலுள்ள வனப்பகுதியில் இயங்கி வந்த தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளின் உற்பத்திக்கூடம் குறித்து, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுக்மா மாவட்ட காவல் படையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கோப்ரா பிரிவினர் இணைந்து நேற்று (செப். 27) அப்பகுதியில் சோதனைகள் மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த ஆயுத உற்பத்திக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவோயிஸ்டுகளின் உற்பத்திக்கூடத்தில் இருந்து விதவிதமான துப்பாக்கிகளின் பாகங்கள், துப்பாக்கிகள் தயாரிக்கப் பயன்படும் கருவிகள் உள்பட ஏராளமான பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, நிகழாண்டில் (2025) சத்தீஸ்கரில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளின் மூலம் 249 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அதில், மாவோயிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் என அறியப்படும் நம்பாலா கேஷவ் ராவ் (எ) பசவராஜு (வயது 70) என்பவரும் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: உலகில் மோசமான 3-வது நகரம் பெங்களூரு! வெளியேறும் மக்கள்!