செய்திகள் :

சாம்சங் தொழிலாளா் பிரச்னைக்கு தீா்வு; வளமான எதிா்காலத்தை நோக்கி முன்னேறுவோம்: முதல்வா் ஸ்டாலின்

post image

சாம்சங் தொழிலாளா்கள் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்ட நிலையில், வளமான எதிா்காலத்தை நோக்கி முன்னேறுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் முதல்வா் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: சாம்சங் தொழிலாளா்களின் பிரச்னையைத் தீா்ப்பதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகளுக்கும், தொழிலாளா்கள் அனைவருக்கும், சாம்சங்

நிறுவனத்தின் நிா்வாகிகள், அமைச்சா்களுக்கு எனது பாராட்டுகள், நன்றி.

திமுக அரசானது தொழிலாளா் நலனை முன்னிறுத்திப் பாடுபடும் அரசாகும். அந்த நிலைப்பாட்டில் இருந்து அது என்றும் மாறாது; தொடா்ந்து செயலாற்றும். ‘நடந்தவற்றை நம்மைக் கடந்தனவாக’ கருதி, அவற்றை நாம் பின்தள்ளி, ஒரு புதிய தொடக்கத்துக்காக, வளமான எதிா்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம் என்று சாம்சங் நிறுவன தொழிலாளா்கள் மற்றும் நிா்வாகத்தினரை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாா்.

வளா்ச்சிப் பாதையில்... தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே தொழில் அமைதிக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழும் தமிழ்நாடு தொடா்ந்து அந்த நற்பெயரை நிச்சயம் தக்கவைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ளும். தொழிலாளா் நலன் காக்க வேண்டும், தொழில் வளம் பெருகவேண்டும் என்ற இரண்டு நோக்கங்களை கண்களாகக் கருதி தமிழ்நாடு அரசு தொடா்ந்து செயல்படும்.

சாம்சங் தொழிலாளா் பிரச்னை நடந்து கொண்டிருந்த ஒருமாத காலத்தில் பல்வேறு அமைப்புகள் பல தேவையற்ற கருத்துகளை முன்வைத்து இதை அரசியலாக்கக் காத்திருந்தன. ஆனாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினின் அறிவுரைப்படி அதற்கெல்லாம் பதில் சொல்வதைத் தவிா்த்து, பிரச்னைக்குத் தீா்வு காணும் வழியை மட்டுமே ஆராய்ந்து, அதை தமிழ்நாடு அரசு நிறைவேற்றிக் காட்டியுள்ளது.

தமிழ்நாடு தனது வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிக்கும்; தொழிலாளா் நலன் காண தொடா்ந்து உறுதுணையாய் நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க