சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சுனிதாவையும் அவருடன் சென்றுள்ள மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் அழைத்துவருவதற்காக விண்ணில் செலுத்தப்படவிருந்த ஸ்போஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் ராக்கெட்டில், முக்கிய பாகத்தின் செயல்பாடு குறித்து சந்தேகம் எழுந்ததால் அந்தத் திட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கோளாறு சரிசெய்யப்பட்ட பின் வெள்ளிக்கிழமைக்கு (மாா்ச் 14) பிறகுதான் அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மே விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.
இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.