தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
தமிழக அரசின் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செய்தார்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் 5 ஆவது மற்றும் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அப்போது,
மொழிக் கொள்கையில் சமரசம் இல்லை!
எவ்வித சமரசத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன்மூலம் தமிழ் பண்பாட்டை பாதுகாப்பதோடு, ஆங்கிலத்தின் உதவியோடு, உலகை வெல்லும் ஆற்றல்களை தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள்.
இன்றைக்கு இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி
* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி
* இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.572 கோடி
* நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.26,678 கோடி
* ஊரக உள்ளாட்சிக்கு ரூ.29,465 கோடி
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,722 கோடி
* மின்சாரத் துறைக்கு ரூ.21,178 கோடி
* மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி
* நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி
* சமூகநலத் துறைக்கு ரூ.8,597 கோடி
* ஆதி திராவிடர் பழங்குடியினர் துறைக்கு ரூ.3,924 கோடி
* தொழில் துறைக்கு ரூ.5,833 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.