செய்திகள் :

தாழ்வான பகுதிகளில் வசிப்போரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

post image

பருவமழையால் பாதிக்கப்படும் தாழ்வான பகுதிகளில் வசிப்போரை நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு நடத்தினாா். அமைச்சா் சா.மு.நாசா், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களுடன் கலந்துரையாடியதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி: ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். குறிப்பாக, கடலோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நேரில் சென்று அழைத்து அவா்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். மேலும், முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், உணவு வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் பெ. அமுதா, பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா் வி. மோகனசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

அண்ணா அறிவாலய கட்டுப்பாட்டு அறை: எழிலகத்தில் ஆய்வை முடித்த முதல்வா், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றாா். அங்கு பருவமழை பாதிப்பு தகவல்களைச் சேகரிப்பதற்காக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பாா்வையிட்டாா். பின்னா், சென்னையில் உள்ள சில வட்டங்களின் நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தொடா்பு கொண்டு மழை பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்தாா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க