செய்திகள் :

தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால் இருவர் பலி: மக்கள் குற்றச்சாட்டு!

post image

தில்லியில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதமே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தில்லியில் ஷஹதாரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி அடுக்ககத்தில் வெள்ளிக்கிழமை (அக். 18) காலை 5.25 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. அடுக்ககத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், விபத்து ஏற்பட்டு, ஒன்றரை மணிநேரத்துக்கு பிறகே தீயணைப்பு அதிகாரிகள் வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் அடுக்ககத்தில் வசித்து வந்த 42 வயதான ஷில்பி குப்தா, அவரது மகன் பிரணவ் குப்தா இருவரின் உடல்களையும் எரிந்த நிலையில் மீட்டுள்ளனர்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்களின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

இதையும் படிக்க:சல்மான் கான் கொலை முயற்சியில் சமரசம் செய்ய ரூ. 5 கோடி கோரிய பிஷ்னோய் கும்பல்!

இந்த நிலையில், தீயணைப்பு அதிகாரிகளின் தாமதத்தால்தான் இருவர் உயிரிழந்து விட்டதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அவர்கள் வருவதற்குள் இரண்டு தளங்களும் எரிந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

இருப்பினும், குறுகிய பாதைகளில் வருவது சிரமம் என்பதால்தான் தீயணைப்பு அதிகாரிகளுக்கு தாமதம் ஏற்பட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு அதிகாரிகள் கூறியதாவது ``மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம். மேலும், மூச்சுத் திணறல் காரணமாகவே இருவரும் உயிரிழந்திருக்கக் கூடும். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர்.

சோப்பு டப்பாக்குள் ரூ. 5.5 கோடி?

அஸ்ஸாமில் சோப்பு டப்பாக்குள் வைத்து போதைப்பொருளைக் கடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.அஸ்ஸாமில் குவஹாட்டி நகரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமைய... மேலும் பார்க்க

அப்பாஸ் அன்சாரிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் எம்எல்ஏ அப்பாஸ் அன்சாரிக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிபதிகள் எம்எம.சுந்தரேஷ் மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பாஸ் அன்சாரிக்கு விடுதலை வழ... மேலும் பார்க்க

பிகாரில் கள்ளச்சாராய பலி 33 ஆக உயர்வு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. பிகார் மாநிலத்தில் சிவான் மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் குடித்தவர்கள் மயக்கமடைந்த... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட் தேர்தல்: முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

ஜார்க்கண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்... மேலும் பார்க்க

சல்மான் கான் கொலை முயற்சியில் சமரசம் செய்ய ரூ. 5 கோடி கோரிய பிஷ்னோய் கும்பல்!

ஹிந்தி நடிகர் சல்மான் கான் மீதான கொலை முயற்சியை கைவிடுவதற்கு ரூ. 5 கோடி கேட்டு, பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.நவி மும்பையின் பான்வேல்லில் உள்ள நடிகர் சல்மான் கானின் பண்ணை வீட்டுக்குச் ... மேலும் பார்க்க