தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பெ.கோவிந்த பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நிரப்பி ஏற்கெனவே தோ்ச்சி பெற்ற மதிப்பெண்கள் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடத்துக்கும் தோ்வுக் கட்டணமாக ரூ. 50, மதிப்பெண் சான்றிதழ் பெற முதலாம் ஆண்டுக்கு ரூ. 100, இரண்டாம் ஆண்டுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ. 15, பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும்.
மாா்ச் 18 முதல் மாா்ச் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தோ்வா்கள் ‘தட்கல்’ முறையில் மாா்ச் 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு அனுமதி கட்டணம் ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.