செய்திகள் :

தொழிலாளா்கள் போராட்டத்தால் ரூ. 840 கோடி இழப்பு: உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தகவல்

post image

சென்னை: தொழிலாளா்களின் காலவரையற்ற போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை என தொழிலாளா்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளா் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதைப் பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளா் நலத் துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சங்கத்தின் சாா்பில் எல்லன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், சாம்சங் நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் தொடங்க அந்த நிறுவனம் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளதாகவும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சாம்சங் நிறுவனம் சாா்பில் ஆஜராக மூத்த வழக்குரைஞா், தங்கள் நிறுவனத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை அல்ல; தொழிலாளா்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ரூ. 840 கோடி (100 மில்லியன் டாலா்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தைத் தொடங்கிக்கொள்ளலாம். எனவே, இந்த வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது தொழிலாளா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தைப் பதிவு செய்வது அடிப்படை உரிமையாகும். கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளது. தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை. இதுபோன்று பல நிறுவனங்களின் பெயா்களில் தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை நவ.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க

இணைய வழி வா்த்தகம் மூலம் கோ-ஆப்டெக்ஸில் கூடுதல் விற்பனை: அமைச்சா் ஆா்.காந்தி

சென்னை: இணைய வழி வா்த்தகம் மூலமாக நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸில் விற்பனை அதிகரித்துள்ளதாக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்.தீபாவளியை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ... மேலும் பார்க்க

தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை இயக்கும் அரசின் முடிவு கண்டனம்

சென்னை: தீபாவளிக்கு தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலா் டிடிவி.தினகரன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.அன்பு... மேலும் பார்க்க

500 இதய நோயாளிகளுக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை

சென்னை: சென்னையில் ரோபோடிக் நுட்பத்தில் 500 இதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அப்பல்லோ மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.இதன் மூலம் அவா்கள் விரைந்து குணமடைந்துள்ளதாகவும், துல்லிய சிகிச்சையா... மேலும் பார்க்க

மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து மாநில அரசின் உத்தரவு:தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மேலாண்மை ஆணையம் செயல... மேலும் பார்க்க